இந்திய பங்குச்சந்தையில் பிரபலமான முதலீட்டாளராகவும் இந்தியாவின் வாரன் பஃபெட்டாகவும் கருதப்பட்டவர் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. கடந்த 2022 ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று துரதிர்ஷ்டவசமாக ஜுன்ஜுன்வாலா காலமானார். இவரது சாதனை சரித்திரம் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்ததொரு வழிகாட்டியாகும்.
தலால் ஸ்ட்ரீட்டின் பிக் புல்லாக மாறிய ஜுன்ஜுன்வாலா தேர்ந்தெடுத்த பாதை ஒன்றுமேயில்லை என்பதிலிருந்து இமயத்தின் சிகரத்தில் முடிந்தது. லிஸ்டடு பங்கில் ரூ.5000 முதல் ரூ.37,500 கோடிகள் வரையும் தனது பங்காக உயர்த்தினார்.

ஒரு நடுத்தர வகுப்பில் பிறந்தவர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. அவருக்கு பங்கு சந்தை வர்த்தகத்தில் தீராத மோகம். வருவாய்த்துறை அதிகாரியாக இருந்த தனது தந்தையை பார்த்து ஜுன்ஜுன்வாலாவும் பங்குச் சந்தை மீது அதிக ஆர்வம் காட்டினார். கஷ்டப்பட்டு படித்து சார்ட்டடு அக்கவுன்டன்ட் ஆனார்.
கடந்த 1985 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். அவர் கைதொட்ட பங்குகள் எல்லாம் பொன்னானது. அவர் காலமானபோது அவர் சுமார் ரூ.40,000 கோடிகளை சம்பாதித்திருந்தார்.
சார்ட்டடு அக்கவுன்டன்ட் ஆன பின்னர் ஜுன்ஜுன்வாலா பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பியபோது அதற்கு அவரது தந்தை கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். பங்கு முதலீடுக்காக யாரிடமும் கடன் வாங்க வேண்டாம் என்றும் அவரது தந்தை புத்திமதி சொன்னார். நண்பர்கள், குடும்பத்தாரிடமும் கைமாற்று வாங்கக்கூடாது என்று கட்டுப்பாடுகளை விதித்தார். இருப்பினும் தனக்கென்று சிறிதளவு பணத்தை ஜுன்ஜுன்வாலா ஏற்பாடு செய்தார்.
டாடா குழுமத்தின் டாடா டீ நிறுவனத்தில் அவர் தனது முதல் வெற்றியை அடைந்தார். ரூ.5000 தொடக்க முதலீடாக வைத்து டாடா டீ நிறுவனத்தில் பங்குகளை தலா ரூ.43க்கு வாங்கினார். அதுதான் அவரது சாதனைப் பயணத்தின் முதல் அடி. 1986ஆம் ஆண்டு அதன் மூலம் ரூ.5 லட்சம் சம்பாதித்து அதில் ரூ.2.16 லட்சத்தை செலவு செய்தார். முதல் காலாண்டில் பங்குகள் விலை உயர்ந்ததால் தனது பங்குகளை தலா ரூ.143க்கு விற்றார்.
போர்ப்ஸ் தகவல்படி, 2022 ஆம் ஆண்டு அவர் இறக்கும்போது அவரது நிகர சொத்து மதிப்பு 5.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது இப்போது ரூ.48,000 கோடியாகும். முதலீட்டில் கில்லாடியான ஜுன்ஜுன்வாலா வெறும் 5000 ரூபாயை வைத்து இத்தனை சம்பாதியத்தைப் பெற்றார். அவரது வருவாயின் பெரும்பங்கு பங்குச் சந்தையிலிருந்துதான் வந்தது. இது அவரது அபார சாதனைக்கு வழிவகுத்தது.
ஜுன்ஜுன்வாலாவின் சாதனை சூத்திரங்கள்:
வித்தியாசமாக இரு- மற்றவர்கள் விற்கும்போது நீ வாங்கு. மற்றவர்கள் வாங்கும்போது நீ விற்றுவிடு.
பொறுமையாக இரு- எந்தப் பங்கிலும் முதலீடு செய்யும்போது நன்றாக யோசித்து நேரத்தை எடுத்துக் கொள். இழப்புகளை தவிர்த்து விடு.
தயாராக இரு- பங்குச் சந்தையில் நஷ்டம் என்பது சகஜமான விஷயமாகும்.
ஆர்வத்துடன் இரு- கற்பனைகள் இல்லாமல் நீ வெற்றி பெற முடியாது.
நடைமுறைக்கு ஒத்துப்போ- உணர்ச்சிப்பூர்வத்துடன் செய்யப்படும் முதலீடுகள் கட்டாயம் நஷ்டத்தைத்தான் தரும்.


Click it and Unblock the Notifications