ஒரே ஆர்டர்.. அமெரிக்க நிறுவனத்திற்கு ஷாக் கொடுத்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா..!

இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளராக விளங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீட்டில் இயங்கும் SNV ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவில் ஆகாஷ் ஏர் என்ற பெயரில் பயணிகள் விமானச் சேவை துவங்க உள்ள நிலையில் சுமார் 72 போயிங் 737 மேக்ஸ் விமானத்தை ஆர்டர் செய்து அசத்தியுள்ளது.

SNV ஏவியேஷன் நிறுவனம் ஆர்டர் செய்துள்ள 72 போயிங் விமானத்தின் மொத்த விலை என்ன தெரியுமா..?

 ஆகாஷ் ஏர்

ஆகாஷ் ஏர்

ஆகாஷ் ஏர் தனது முதல் விமான ஆர்டரை விமானத் தயாரிப்பு மற்றும் விற்பனையின் முன்னோடியாக விளங்கும் போயிங் நிறுவனத்துடன் செய்துள்ளது. இந்த ஆர்டரில் ஆகாஷ் ஏர் 737-8 மற்றும் 737-8-200 ஆகிய இரண்டு ரக விமானத்தை ஆர்டர் செய்துள்ளது. இவ்விரு விமானங்களும் ஆகாஷ் ஏர் நிறுவனத்தின் திட்டத்திற்கு மிக முக்கியமானது.

 9 பில்லியன் டாலர்

9 பில்லியன் டாலர்

ஆகாஷ் ஏர் இந்தியாவில் குறைவான கட்டணத்தில், பாதுகாப்பான அதே நேரத்தில் லாபம் அளிக்கும் வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த இரு ரக விமானத்தைத் தேர்வு செய்துள்ளது. தற்போது ஆகாஷ் ஏர் ஆர்டர் செய்துள்ள விமானத்தின் மொத்த மதிப்பு 9 பில்லியன் டாலர்.

 வினய் துபே

வினய் துபே

இதுகுறித்து ஆகாஷ் ஏர் சிஇஓ வினய் துபே கூறுகையில், எங்களது முதல் விமான ஆர்டரை போயிங் நிறுவனத்துடன் செய்ததிற்கு மகிழ்ச்சி அடைகிறோம். எங்களுடைய திட்டம் மற்றும் நிர்வாகத்தை நம்பி 72 விமானங்களுக்கான ஆர்டரை போயிங் ஏற்றுக்கொண்டதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

 இந்திய சந்தை

இந்திய சந்தை

மேலும் அவர் உலகிலேயே வேகமாக வளரும் விமானப் போக்குவரத்துச் சந்தையில் இந்தியா மிக முக்கியமானது, இந்தியாவில் விமானச் சேவை துறையில் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்குப் பின் விமானப் போக்குவரத்தில் அதிகளவிலான உயர்வை காண முடிகிறது. மேலும் அடுத்த 10 வருடத்தில் இதன் வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் எனவும் ஆகாஷ் ஏர் சிஇஓ வினய் துபே தெரிவித்துள்ளார்.

 737 ரக விமானங்கள்

737 ரக விமானங்கள்

போயிங் நிறுவனத்தின் பிற விமானங்களை விடவும் 737 ரக விமானங்கள் குறைந்த எரிபொருள் கொண்டு மிகவும் சிறப்பாக இயங்கக் கூடியவை. இந்த விமானங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் ஒரு விமான நிறுவனம் எரிபொருள் செலவை மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை அளிக்க முடியும்.

 2,200 விமானங்கள்

2,200 விமானங்கள்

போயிங் நிறுவனத்தின் கணிப்பின் படி அடுத்த 20 வருடத்தில் தென் ஆசிய நாடுகளில் மட்டும் சுமார் 2,200 விமானங்கள் விற்பனை செய்யும் வர்த்தகம் உருவாகும் என்று கணித்துள்ளது. 2,200 விமானங்கள் என்றால் கிட்டதட்ட இன்றைய மதிப்பீட்டில் 320 பில்லியன் டாலர். இதில் வேகமாக வளரும் இந்தியா பொருளாதாரம் மற்றும் நடுத்தர மக்களின் பங்கீடு முக்கியமானதாக விளங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+