இந்திய விமானத் துறையில் அதிகப்படியான வளர்ச்சி வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் டாடா திட்டமிட்டு ஏர் இந்தியாவை வாங்கியது போல், நாட்டின் முன்னணி பங்குச்சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீட்டில் துவங்க இருக்கும் புதிய பட்ஜெட் விமானச் சேவை நிறுவனமான ஆகாஷ் ஏர் நிறுவனத்தின் லோகோ மற்றும் தீம் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.
காவி மற்றும் நீலம்
ஆகாச ஏர் நிறுவனத்தின் லோகோ காவி மற்றும் நீல நிறத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. விமானத்தின் கதகதப்பையும், இளமையும் மற்றும் மரியாதைக்குரிய இயல்புகளைக் காட்டும் விதமாக உருவாக்கப்பட்டு உள்ளது என ஆகாச ஏர் தெரிவித்துள்ளது.
The Rising A தீம்
இதேபோல் ஆகாச ஏர் நிறுவனம் தனது தீம்-ஐ 'The Rising A' அறிவித்துள்ளது, வானத்தின் கூறுகளால் ஈர்க்கப்பட்டு, ரைசிங் ஏ என்பதைச் சூரியனின் வெப்பத்தைக் காட்டும் விதமாகச் சன்ரைஸ் ஆரஞ்சு நிறத்திலும், ஒரு பறவை சிரமமின்றிப் பறக்கும் மற்றும் விமான இறக்கையின் நம்பகத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் 'The Rising A' தீம் உருவாக்கப்பட்டு உள்ளது என ஆகாச ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா
இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளராக விளங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீட்டில் இயங்கும் SNV ஏவியேஷன் நிறுவனம், இந்தியாவில் ஆகாச ஏர் என்ற பெயரில் பயணிகள் விமானச் சேவை துவங்க உள்ள நிலையில் சுமார் 72 போயிங் 737 மேக்ஸ் விமானப் பிரிவில் 2 ரக விமானங்களை ஆர்டர் செய்து அசத்தியுள்ளது.
போயிங் 737 ஜெட் விமான
இந்திய அரசு போயிங் 737 ஜெட் விமானத்தை இரண்டரை வருடம் பறக்கத் தடை விதித்து இருந்த நிலையில், தற்போது அனுமதி அளித்த காரணத்தால் SNV ஏவியேஷன் நிறுவனம் 72 போயிங் 737 மேக்ஸ் விமானத்தை ஆர்டர் செய்துள்ளது.
SNV ஏவியேஷன் நிறுவனம்
இந்தியாவில் மலிவு விலை விமானச் சேவையை வழங்க SNV ஏவியேஷன் நிறுவனம் மற்றும் ஆகாச ஏர் பிராண்டுக்குச் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் முதல்கட்ட ஒப்புதலைக் கொடுத்துள்ள நிலையில், 2022 முதல் விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளது.
ஆகாச ஏர்
ஆகாச ஏர் இந்தியாவில் குறைவான கட்டணத்தில், பாதுகாப்பான பயணத்தையும் அதே நேரத்தில் லாபம் அளிக்கும் வர்த்தகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம் என ஆகாஷ் ஏர் சிஇஓ வினய் துபே தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications