4 நிறுவன பங்குகளை அதிரடியாக விற்ற ராகேஷ் ஜுன்ஜுன்வாலா.. என்னென்ன பங்குகள் அது..!

இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்து வரும், மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவர் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்.

இவர் வாங்கும் பங்குகளை வாங்கிக் குவிக்கும் முதலீட்டாளர்களும் உண்டு. இவரின் போர்ட்போலியோவில் ஒரு பங்கு இருக்கின்றது எனில், அந்த பங்கு நிச்சயம் லாபம் காணும் என்ற அளவுக்கு, முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையுண்டு. ஆனால் தற்போது ராகேஷ் சில பங்குகளை விற்று வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் சில பங்குகளில் தனது முதலீட்டினையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

இன்றைய பங்கு சந்தை நிலவரம்

தொடர்ச்சியாக கடந்த எட்டு அமர்வுகளாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 418.86 புள்ளிகள் அதிகரித்து, 62,184.45 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 96.85 புள்ளிகள் அதிகரித்து, 18,573.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

பங்குகளில் இருந்து வெளியேற்றம்

பங்குகளில் இருந்து வெளியேற்றம்

பங்கு சந்தைகளில் முதலீடு செய்யும் மிகப்பெரிய முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, லூபின் (Lupin), ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (Fortis healthcare), தி மந்தனா ரீடைல் வென்சர்ஸ்(The Mandhana Retail ventures), டிஏஆர்சி (TARC) உள்ளிட்ட பங்குகளில் இருந்து முதலீடுகளை குறைத்துள்ளார். சமீபத்தில் தான் எம்சிஎக்ஸ் நிறுவனத்தில் இருந்தும் தனது பங்குகளை குறைத்த நிலையில், இந்த பங்கு விற்பனையானது நடந்துள்ளது.

எம்சிஎக்ஸ் பங்கு விகிதம்

எம்சிஎக்ஸ் பங்கு விகிதம்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா வசம் எம்சிஎஸ் நிறுவனத்தில் 25 லட்சம் பங்குகள் இருந்த நிலையில் அல்லது 4.9% பங்குகளை ஜூன் 2021 காலாண்டில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த பங்கு விகிதமானது செப்டம்பர் 2021 காலாண்டில் 1% கீழாக குறைந்துள்ளது.

தி மந்தனா ரீடைல் வென்சர்ஸ்

தி மந்தனா ரீடைல் வென்சர்ஸ்


மேலும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர், தி மந்தனா ரீடைல் வென்சர்ஸ், டிஏஆர்சி மற்றும் லூபின் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பங்கு விகிதங்களை குறைத்துள்ளார் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
முக்கிய முதலீட்டாளரான தி மந்தனா ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தில் 7.39% அல்லது 16.30 லட்சம் பங்குகளை செப்டம்பர் காலாண்டு முடிவில் வைத்துள்ளார். இதே ஜூன் காலாண்டில் 12.74% அல்லது 28.13 லட்சம் பங்குகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிஏஆர்சி பங்குகள்

டிஏஆர்சி பங்குகள்

டிஏஆர்சி நிறுவனத்தில் ஜூன் காலாண்டில் 3.39% பங்குகளை வைத்திருந்த நிலையில், இது செப்டம்பர் காலாண்டு முடிவில் 1.59% அல்லது 46.95 லட்சம் பங்குகளாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் மற்ற இரு பங்குகளில் எவ்வளவு குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்கினை குறைக்கவில்லை

பங்கினை குறைக்கவில்லை

எனினும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா டாடா கம்யூனிகேஷன், மேன் இன்ஃப்ராட்ரக்சன், என்சிசி, ஓரியண்ட் சிமெண்ட், வோக்ஹார்ட், அக்ரோ டெக் ஃபுட்ஸ், கனரா வங்கி, நால்கோ உள்ளிட்ட நிறுவன பங்குகள் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
செப்டம்பர் மாத காலாண்டு நிலவரப்படி, ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் பங்கு மதிப்பு 25,790.7 கோடி ரூபாயாக உள்ளது.

பங்குகள் சேர்ப்பு

பங்குகள் சேர்ப்பு

சில பங்குகளை விற்று வெளியேறியுள்ள ஜூன் ஜூன்வாலா தனது போர்ட்போலியோ பட்டியலில் சில பங்குகளை சேர்த்துள்ளார். இந்த செப்டம்பர் காலாண்டில் அவரின் போர்ட்போலியோ பட்டியலில், கனரா வங்கியின் பங்குகள் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது இவரின் கைவசம் 2,90,97,400 பங்குகள் அல்லது 1.60% பங்குகள் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+