10 நிமிடத்தில் ரூ.318 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா.. டாடா குழும பங்கினால் பெரும் நஷ்டம்..!

ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் பேவரைட் பங்கான டைட்டன் நிறுவனத்தால், வெறும் 10 நிமிடங்களில் 318 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதெப்படி 10 நிமிடத்தில் 318 கோடி ரூபாய் இழப்பு எப்படி? வாருங்கள் பார்க்கலாம்.

சமீப நாட்களாக சர்வதேச சந்தையில் அதிகரித்து வரும் பணவீக்கம் மத்தியில், சந்தைகள் ஏற்ற இறக்கத்தில் சந்தைகள் காணப்படுகின்றன. இதன் எதிரொலியாக இந்திய சந்தையும் பலத்த சரிவில் காணப்படுகின்றது.

10 நிமிடத்தில் ரூ.318 கோடிக்கு மேல் நஷ்டமா?

10 நிமிடத்தில் ரூ.318 கோடிக்கு மேல் நஷ்டமா?

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது சகஜமான விஷயம் தான். ஆனால் ஒரு பங்கில் 10 நிமிடத்தில் 318 கோடி நஷ்டம் எனும்போது அது யோசிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. ஏன் இந்த வீழ்ச்சி, எதனால் இந்த பங்கானது இப்படி சரிவினைக் கண்டுள்ளது. அதுவும் எப்படி வெறும் 10 நிமிடத்தில் இவ்வளவு பெரிய நஷ்டத்தினை கண்டிருக்க முடியும், வாருங்கள் பார்க்கலாம்.

தற்போதைய சந்தை நிலவரம்

தற்போதைய சந்தை நிலவரம்

இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய சந்தைகள் பெரும் சரிவில் காணப்பட்டன. குறிப்பாக சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவிலும், நிஃப்டி 200 புள்ளிகளுக்கு மேல் சரிவில் காணப்பட்டது. தற்போது 2.55 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 900.90 புள்ளிகளுக்கு மேல் சரிவிலும், நிஃப்டி 268.30 புள்ளிகளுக்கு மேல் சரிnthu, 16,980.10 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.

டைட்டன் பங்கு நிலவரம்

டைட்டன் பங்கு நிலவரம்

டைட்டன் நிறுவனத்தின் பங்கு விலையானது தற்போது 3.49% அல்லது 82.40 ரூபாய் வீழ்ச்சி கண்டு 2,275 ரூபாயாக என் எஸ் இ-ல் வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்சம் 2,339.30 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 2,257.10 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-ல் 3.49% அல்லது 81.05 ரூபாய் குறைந்து, 2276.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 2,350 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2,257.75 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 2678.10 ரூபாயாகவும், இதே குறைந்தபட்ச விலை 1,396.25 ரூபாயாகும்.

 

தொடக்கத்தில் எப்படி?

தொடக்கத்தில் எப்படி?

இந்த பங்கின் விலையானது இன்று காலை சந்தை தொடக்கத்தில் 2,336 ரூபாயாக இருந்த நிலையில், அடுத்த 10 நிமிடத்தில் 2,283 ரூபாயாக சரிவினைக் கண்டது. இது தற்போது 2275 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

டைட்டன் பங்கின் விலையானது கடந்த அமர்வில் 2,375.25 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

ஷேர் ஹோல்டிங் பேட்டர்ன்

ஷேர் ஹோல்டிங் பேட்டர்ன்

டைட்டன் நிறுவனத்தில் ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம்
3,37,60,395 பங்குகளும், அவரது மனைவி ரேகா ஜுன் ஜுன்வாலா வசம் 95,40,575 பங்குகளும் உள்ளன. இது மொத்த பங்கு வெளியீட்டில் முறையே 3.80% மற்றும் 1.07% ஆகும். மொத்ததில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மற்றும் ரேகா ஜுன் ஜுன்வாலா வசம்
4,33,00,970 பங்குகள் உள்ளன.

ரூ.400 கோடிக்கு மேல் நஷ்டம்

ரூ.400 கோடிக்கு மேல் நஷ்டம்

தற்போதைய நிலவரப்படி ( ரூ.2283) 2,375.25 ரூபாயில் இருந்து, ஒப்பிட்டு பார்க்கும்போது, 100 ரூபாய்க்கும் மேலாக சரிவில் காணப்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி 400 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தில் காணப்படுகிறது. எனினும் காலை 10 நிமிடத்திற்குள்ளேயே ஒரு பங்குக்கு 73.6 ரூபாய் நஷ்டத்தினை கண்டது. அதனுடன் ஒப்பிடும்போது 10 நிமிடத்தில் 318 கோடி ரூபாய் நஷ்டத்தில் காணப்படுகின்றது.

 நிபுணர்களின் கணிப்பு என்ன?

நிபுணர்களின் கணிப்பு என்ன?

இந்த பங்கின் விலையானது குறைந்திருந்தாலும், இது வாங்க சரியான நேரம் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் வாங்கி வைக்கலாம். ஏற்கனவே கையில் ஆர்டர்கள் இருந்தால் அதனை அப்படியே வைத்திருக்கலாம் என கூறுகின்றனர். டைட்டனின் வலுவான சப்போர்ட் விலையானது 2,200 ரூபாயாகும். ஆக தற்போதைய லெவலில் ஒருவர் வாங்க நினைத்தால், அதற்கு ஸ்டாப் லாஸ் 2,200 ரூபாயாக வைத்துக் கொள்ளலாம். இலக்கு விலையாக 2,350 ரூபாய் மற்றும் 2,400 ரூபாயினை வைத்துக் கொள்ளலாம். ஆக மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் வாங்கினாலும் கட்டாயம் ஸ்டாப் லாஸினை வைத்துக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+