இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்படும் பிக் புல் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல் நல குறைவால் மறைந்தாலும் அவருடைய முதலீட்டு சாம்ராஜ்ஜியத்தை அவருடைய மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா பல முக்கிய நபர்களின் உதவியால் நிர்வாகம் செய்து வருகிறார்.
இந்திய பங்குச்சந்தையில் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் முக்கியமானவராக விளங்கும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வுக்கு இன்று பிறந்த நாள். இவர் மறைந்தாலும், இவருடைய வெற்றி பயணம் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக உள்ளது.

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 1985 ஆம் ஆண்டில் பிஎஸ்இ குறியீடு 150 புள்ளிகளாக இருந்த காலத்தில் இருந்து முதலீடு செய்து வருகிறார். 1985ல் வெறும் 5000 ரூபாய் உடன் தனது முதலீட்டை துவங்கி முழுநேர பங்குச்சந்தை முதலீட்டாளராக உயர்ந்தது மட்டும் அல்லாமல் இந்திய பில்லியனர்கள் பட்டியலிலும் இடம்பெற்றார்.
இந்திய பங்குச்சந்தை குறித்து ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் முதலீட்டு அறிவும், சரியான முடிவுகளும் அவருக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்தது. எந்த நிலையிலும் வீழ்ச்சி அடையாத போர்ட்போலியோ-வை உருவாக்கியதன் மூலம் அவருடைய முதலீட்டு சாம்ராஜ்ஜியம் இன்று வரையில் லாபத்தில் உள்ளது.
ராகேஷ் ஜுன்ஜுன்வாலா 14 ஆகஸ்ட் 2022 அன்று இறந்தார், பல்வேறு நிறுவனங்களில் தனது முதலீட்டை விட்டு சென்றது மட்டும் அல்லாமல் தனது முதலீட்டு பிராண்டின் மூலம் பல நிறுவனத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு சமீபத்திய உதாரணம் ஆகாசா ஏர்.
இந்த நிலையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (ரேகா ஜுன்ஜுன்வாலா) கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் பங்கு இருப்பு பட்டியலும், பங்கு இருப்பு அளவும், அதன் மதிப்பையும் பற்றி இப்போது பார்க்கலாம். உங்களுக்கு விருப்பமாயின் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா முதலீடு செய்த நிறுவனங்களின் நிதி நிலையை ஆய்வு செய்த பின்பு முதலீடு செய்யலாம்.
ஆப்டெக் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 43.70 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 894.0 கோடி ரூபாய்.
அக்ரோ டெக் ஃபுட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 8.20 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 174.2 கோடி ரூபாய்.
ஆட்டோலைன் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 4.00 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 10.8 கோடி ரூபாய்.
கனரா வங்கியில் சுமார் 2.10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 1,209.3 கோடி ரூபாய்.
கிரிசில் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 5.50 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 1,558.7 கோடி ரூபாய்.
D B Realty நிறுவனத்தில் சுமார் 1.40 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 36.5 கோடி ரூபாய்.
Edelweiss Financial Services நிறுவனத்தில் சுமார் 1.30 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 62.6 கோடி ரூபாய்.
எஸ்கார்ட்ஸ் குபோடா லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 1.40 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 404.8 கோடி ரூபாய்.
பெடரல் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 3.50 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 959.8 கோடி ரூபாய்.
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 4.50 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 1,058.7 கோடி ரூபாய்.
ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 8.40 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 95.6 கோடி ரூபாய்.
இந்தியன் ஹோட்டல் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 2.10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 1,142.9 கோடி ரூபாய்.
ஜூபிலண்ட் பார்மோவா லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 6.80 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 424.4 கோடி ரூபாய்.
கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 4.70 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 487.3 கோடி ரூபாய்.
என்சிசி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 13.10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 993.6 கோடி ரூபாய்.
Prozone Intu Properties நிறுவனத்தில் சுமார் 2.10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 7.8 கோடி ரூபாய்.
ராலிஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 10.30 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 413.3 கோடி ரூபாய்.
சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 1.90 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 129.5 கோடி ரூபாய்.
டாடா கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 1.80 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 787.3 கோடி ரூபாய்.
டாடா மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 1.60 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 3,090.7 கோடி ரூபாய்.
டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 5.30 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 14,434.2 கோடி ரூபாய்.
வா டெக் வபாக் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 8.00 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 237.3 கோடி ரூபாய்.
Wockhardt நிறுவனத்தில் சுமார் 2.10 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 72.3 கோடி ரூபாய்.
சிங்கர் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 7.00 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 31.0 கோடி ரூபாய்.
ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 5.20 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 60.0 கோடி ரூபாய்.
நசாரா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 10.00 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 467.5 கோடி ரூபாய்.
ஜூபிலண்ட் இங்க்ரீவியா லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 3.20 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 211.2 கோடி ரூபாய்.
ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 17.30 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 5,945.0 கோடி ரூபாய்.
மெட்ரோ பிராண்ட்ஸ் லிமிடெட் 14.40 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 3,749.7 கோடி ரூபாய்.
இந்த தரவுகளை பின்னாலஜி-யின் டிக்கர் வெளியிட்டுள்ளது, மேலும் இது மார்ச் காலாண்டு முடிவுகளின் தரவுகள் படி பட்டியலிடப்பட்டு உள்ளது. மேலும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா (ரேகா ஜுன்ஜுன்வாலா) கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் பங்கு இருப்பின் மதிப்பு 39,488 கோடி ரூபாய்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications