இந்தியாவின் வாரன் பஃபெட் என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, கிரிப்டோகரன்சி சந்தையானது வீழ்ச்சி காணலாம். ஆனால் அது ஈக்விட்டி சந்தையினை பெரியளவில் பாதிக்காது.
இது குறித்து எக்னாமிக் டைம்ஸ்-க்கு அளித்த இண்டர்வியூவில் கூறியுள்ளார். அதில் கிரிப்டோகரன்சிகள் மற்றும் ஈக்விட்டிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது. கிரிப்டோகரன்சிகள் ஒரு நாள் சரிந்து விடும்.
நிஃப்டி 15000 புள்ளிகளுக்கு கீழ் செல்லாது என்றும் கணித்துள்ளனர்.
கார்ப்பரேட் வளர்ச்சி அதிகரிக்கும்
மேலும் 2022ம் ஆண்டு சாதகமான ஆண்டாக இருக்கும். இது பெரியளவிலான மாற்றம் இருக்காது. ஏனெனில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சியானது ஆரோக்கியமானதாக இருக்கலாம்.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் இந்த கருத்தானது, மத்திய பட்ஜெட் 2022ல் மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலம் சொந்தமாக டிஜிட்டல் கரன்சியை வெளியிடும். மேலும் கிரிப்டோகரன்சிகள் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படலாம் என பல்வேறு வரி திட்டங்களை அறிவித்த பிறகு வந்துள்ளது.
தனியார் முதலீடுகளில் கவனம்
மோடி அரசு எதைச் செய்தாலும் அது நீண்டகால வாழ்வாதாரத்தை நோக்கியதே தவிர, குறுகிய கால ஆதாயங்களுக்காக அல்ல. நாட்டில் முதலாளித்துவம் அல்லது சோசலிசம் இல்லை. ஆனால் யதார்த்தம் உண்டு. அரசு தனியார் முதலீடுகளை அதிகரிக்க அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது என ஜுன்ஜுன்வாலா கூறியுள்ளார்.
நம்பிக்கை
வளர்ச்சி என்பது மிக முக்கியமான விஷயம். மேலும் இது அனைத்து இந்தியர்களின் நலனுக்காகவும் உள்ளது. நல்ல வளர்ச்சியின் மூலம் சமூக நலன் மற்றும் வேலைகளையும் உருவாக்க முடியும்.
இதற்காக அரசு பிஎல்ஐ திட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இது மிகப்பெரிய வெற்றியை காணும். இந்தியா 10% வளர்ச்சியை காணலாம் என அரசு கனவு காண்கிறது. இது சாத்தியமாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கவனிக்க வேண்டிய பங்குகள்
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, உள்கட்டமைப்பு துறை, மெட்டல்ஸ் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி துறை பங்குகள் மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகள் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன. தனியார் வங்கிகளை விட, பொதுத் துறை வங்கிகள் லாபம் காணத் தொடங்கியுள்ளன. இதற்கிடையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது ஜிடிபியில் 8% எட்டலாம் எனவும் கூறியுள்ளார்.
டாடா குழுமம்
மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவில் நிதித் துறையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச நாடுகள் பலவும் இந்தியாவினை கவனித்து வருகின்றன. குறிப்பாக டாடா குழும நிறுவனங்கள் இன்னும் ஏற்றம் காணும் விதமாக உள்ளன. அடுத்த டாடா குழும நிறுவனத்தினை தேடுகிறேன். வாகன நிறுவனமான டாடா மோட்டார்ஸ் குறித்து நான் உற்சாகமாக இருக்கிறேன் என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
ஹெல்த் இன்சூரன்ஸ்
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் எபிடா விகிதமும் அதிகரித்துள்ளது. இது சிமெண்ட் நிறுவனங்களை காட்டிலும் அதிகம். அதேசமயம் ஹெல்த் இன்சூரன்ஸ் துறை மிக பின் தங்கியுள்ளது. மருத்துவ துறையில் அதிகரிக்கும் செலவினங்கள், ஹெல்த் இன்சூரன்ஸ் துறை வளர்ச்சிக்கு காரணமாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications