10 நிமிடத்தில் ரூ.850 கோடி சம்பாதித்த ராகேஷ் & ரேகா ஜுன்ஜுன்வாலா.. எப்படித் தெரியுமா..?

இந்தியாவின் வாரன் பபெட் எனச் செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பல நிறுவனங்களில் முதலீடு செய்து தொடர்ந்து அதிகளவில் சம்பாதித்து வருகிறார்.

இவர் ஒரு நிறுவனத்தில் பங்கு வாங்கினால் அந்நிறுவனப் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடையும். அதேவேளையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்தாலும் தொடர்ந்து சரியும், அந்த அளவிற்கு இந்திய சந்தையில் இவரின் ஆதிக்கம் உள்ளது.

இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் துவங்கிய 10 நிமிடத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரது மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா ஆகியோர் இணைந்து சுமார் 850 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சம்பாதித்துள்ளனர். எப்படித் தெரியுமா..?

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

இந்தியப் பங்குச்சந்தையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா-வின் ஆதிக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் இவர் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறார் என்பதை எப்போதும் கண்காணித்து வருவார்கள்.

டைட்டன்

டைட்டன்

அந்த வகையில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா இணைந்து பல வருடங்களுக்கு முன்பு முதலீடு செய்த நிறுவனம் தான் டைட்டன். இந்த நிறுவனத்தில் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் ரேகா ஜுன்ஜுன்வாலா இணைந்து சுமார் 4.81 சதவீத பங்குகளை முதலீடு செய்து கைப்பற்றியுள்ளனர்.

17,770 கோடி ரூபாய்

17,770 கோடி ரூபாய்

இன்று டைட்டன் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான வளர்ச்சி அடைந்த நிலையில் டைட்டன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 17,770 கோடி ரூபாய் அதிகரித்தது.

ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பீடு

ரூ.2 லட்சம் கோடி சந்தை மதிப்பீடு

இதன் மூலம் டைட்டன் நிறுவனம் இன்று வரலாற்றிலேயே முதல் முறையாகச் சந்தை மதிப்பீட்டின் அளவு 2 லட்சம் கோடி ரூபாய் அளவை தொட்டு உள்ளது. டாடா குழுமத்தில் பல நிறுவனங்கள் பங்குச்சந்தையில் இருந்தாலும் 2 லட்சம் கோடி சந்தை மதிப்பீட்டைத் தொட்டு உள்ளது 2 நிறுவனம் மட்டுமே, டிசிஎஸ் மற்றும் டைட்டன்.

11.5 சதவீதம் உயர்வு

11.5 சதவீதம் உயர்வு

டைட்டன் நிறுவன பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 11.5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 2,383.35 ரூபாய் அளவீட்டைத் தொட்டு 52 வார உயர்வை அடைந்து முதலீட்டாளர்கள் ஸ்வீட் ஷாக் கொடுத்தது.

900 கோடி ரூபாய் லாபம்

900 கோடி ரூபாய் லாபம்

இந்த வளர்ச்சியில் தான் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா மற்றும் ரேகா ஜுன்ஜுன்வாலா தங்களிடம் இருக்கும் 4.81 சதவீத பங்குகள் மூலம் அதிகப்படியாகச் சுமார் 900 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் சம்பாதித்துள்ளனர்.

செப்டம்பர் காலாண்டின் வர்த்தகம்

செப்டம்பர் காலாண்டின் வர்த்தகம்

இந்த அதிகப்படியான வளர்ச்சிக்கு டைட்டன் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டின் வர்த்தக வளர்ச்சி தான் முக்கியக் காரணம். கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் டைட்டன் நிறுவனத்தின் ஜூவல்லரி விற்பனை அளவீடு 78 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் கடைகளின் எண்ணிக்கை 414 ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்

கோவிட்

இதேபோல் மூக்கு கண்ணாடி வர்த்தகம் 74 சதவீதமும், வாட்ச் மற்றும் வேரபிள் பிரிவு 74 சதவீதம், மற்று இதர வர்த்தகம் 121 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக டைட்டன் பெரும்பாலான பிரிவில் கோவிட்-க்கு முந்தைய வர்த்தக அளவீட்டை தொட்டு உள்ளது.

2வது கொரோனா ஆலை

2வது கொரோனா ஆலை

டைட்டன் நிறுவனத்தின் வர்த்தகம் 2வது கொரோனா ஆலை தொற்றுக்குப் பின்பு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இதோடு அமெரிக்காவின் ஜேபி மோர்கன் உட்படப் பல முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் டேட்டிங் நிறுவனங்களும் டைட்டன் நிறுவனப் பங்கின் டார்கெட் விலையை அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடு தான் இன்றைய டைட்டன் நிறுவனத்தின் வளர்ச்சி.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+