இந்தியாவின் மிகப் பெரிய தொழில் சாம்ராஜ்யங்களில் ஒன்று டாடா குழுமம். டாடா குழுமத்தின் முக்கிய கம்பெனிகளில் ஒன்றான டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ராலீஸ் இந்தியா (Rallis India) கம்பெனியின் செப்டம்பர் 2020 காலாண்டு முடிவுகள் சமீபத்தில் வெளியாயின.
ராலீஸ் இந்தியா (Rallis India) கம்பெனியின் கன்சாலிடேடட் வரிக்குப் பிறகான லாபம் (Profit After Tax) இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 83 கோடி ரூபாயாக இருக்கிறதாம். கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில், ராலீஸ் இந்தியா (Rallis India) கம்பெனியின் வரிக்குப் பிறகான லாபம் 85 கோடி ரூபாயாக இருந்தது. ஆக கன்சாலிடேட் வரிக்குப் பிறகான லாபம் சுமாராக இரண்டு சதவிகிதம் குறைந்து இருக்கிறது.

2020 - 21 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் இந்த கம்பெனி 175 கோடி ரூபாயை வரிக்குப் பிறகான லாபமாக ஈட்டி இருக்கிறது. இது கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் ஈட்டிய 145 கோடி ரூபாயை விட 21 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல, ராலீஸ் இந்தியா (Rallis India) கம்பெனியின் கன்சாலிடேடட் வருவாய், இந்த செப்டம்பர் 2020 காலாண்டில் 725 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் இந்த கம்பெனியின் கன்சாலிடேடட் வருவாய் 749 கோடி ரூபாயாக இருந்ததாம். ஆக, கன்சாலிடேடட் வருவாய் மூன்று சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
மெல்ல பொருளாதாரம் பழைய நிலைக்குத் திரும்புவது மற்றும் நல்ல மழைப் பொழிவு காரணமாக, விவசாய நடவடிக்கைகள் வேகம் எடுக்கத் தொடங்கி இருக்கின்றன. என ராலீஸ் இந்தியா (Rallis India) கம்பெனியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி சஞ்ஜீவ் லால் சொல்லி இருக்கிறார்.
தற்போது கம்பெனி மெல்ல செயல்படத் தொடங்கினாலும், வேலை பார்க்கும் ஊழியர்களின் பாதுகாப்புக்கும், அவர்களின் நன்மைக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும்
கூறியிருக்கிறார் கம்பெனியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி.
இந்த இரண்டாவது காலாண்டு காலத்தில், பயிர்களை பாதுகாக்கும் வியாபாரத்தில் 8 சதவிகிதம் வருவாய் அதிகரித்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறார். அதோடு, விதைகள் வியாபாரத்தில் 29 சதவிகிதம் வருவாய் அதிகரித்து இருக்கிறதாம்.


Click it and Unblock the Notifications