அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல மாநிலங்களில் பொது விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது, ஏன் பல்லாயிரம் கோடி ரூபாய் வர்த்தகமாகும் பங்குச்சந்தை கூட ராமர் கோயில் திறப்புக்காக மூடப்பட்டு உள்ளது.
ஒட்டுமொத்த அயோத்தியிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது, இதற்கிடையில் பிரதமர் முதல் பல்வேறு அமைச்சர்கள், அம்பானி முதல் பல தொழிலதிபர்கள், ரஜினிகாந்த் முதல் பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதால் ஒட்டுமொத்த நகரமும் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளது.

இந்த நிலையில் டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, திரிபுரா, கோவா,ஒடிசா,ராஜஸ்தான்,குஜராத், சண்டிகர்,புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் DRY DAY அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மதுபானம், இறைச்சி, மீன் விற்பனைக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவிலில் 'பிரான் பிரதிஷ்டா' விழாவிற்கு மரியாதை செலுத்தும் வகையில், கோவாவில் உள்ள அனைத்து சூதாட்ட விடுதிகளும் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் எட்டு மணி நேரம் மூடப்படும் என்று ஞாயிற்றுக்கிழமை கேசினோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவாவில் ஆறு கடலோர சூதாட்ட விடுதிகள் மற்றும் ஒரு கடல் மீது இருக்கும் கேசினோ ஆகிய அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் 4 மணி வரையில் மூடப்பட உள்ளது. இதன் மூலம் மாநில தலைநகரான பனாஜிக்கு அருகில் உள்ள மாண்டோவி ஆற்றில் சூதாட்ட கப்பல்கள் நங்கூரமிட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவா அரசு அனைத்து அரசு, அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்குத் திங்கள்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ராம் கோவிலின்'பிரான் பிரதிஷ்டை' திங்கள்கிழமை மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் பிரதிஷ்டை சிலை 51 அங்குல உயரமும் 1.5 டன் எடையும் கொண்டது. ஓரே கல்லில் இருந்து வடிவமைக்கப்பட்ட தாமரையின் மீது ஐந்து வயது குழந்தையாக ராமர் நிற்பது போல் இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications