உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதி புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த விழாவை இந்தியாவில் இருக்கும் மக்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் இந்திய மக்கள், வெளிநாட்டினரும் கூர்ந்து கவனித்து எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
ராமர் கோயில் திறப்பு விழா ஏற்பாடுகள் தடபுடலாகவும் கோலாகலமாக ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ் செய்து வருகிறது. ஜனவரி 22 ஆம் தேதியன்று ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராமர் கோயில் திறப்பு விழா காரணமாக அயோத்தியில் புதிய விமான நிலையம், புதிய ரயில் நிலையும், புதிய நீர்வழி போக்குவரத்து, ஹோட்டல், உணவகம் என மொத்த நகரமும் புதிய பொலிவைப் பெற்று வரும் வேளையில் ஜனவரி 22 ஆம் தேதி மட்டும் அயோத்தியிலும், ராமர் கோவில் திறப்பு விழாவைச் சார்ந்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் எனக் கணக்கிடப்பட்டு உள்ளது.
ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் மூலம் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் உருவாகும் என்று வர்த்தகர்களின் அமைப்பான CAIT திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (CAIT) பல்வேறு மாநிலங்களில் உள்ள 30 நகரங்களின் வர்த்தகச் சங்கங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.
ராமர் கோயில் திறப்பு விழா சமய மற்றும் மத உணர்வுகளை எதிரொலிப்பது மட்டுமல்லாமல் பொருளாதார நடவடிக்கைகளிலும், முதலீட்டிலும் புதிய நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. மக்களின் நம்பிக்கையும், நாட்டின் பொருளாதார அமைப்பின் அடிப்படையில் பல புதிய தொழில்களை அயோத்தியில் உருவாக்க வழிவகுக்கின்றன என்று CAIT அமைப்பின் தேசிய செயலாளர் பரவீன் தெரிவித்துள்ளார்.
தற்போது அயோத்தியில் அதிகளவில் டிமாண்டில் இருக்கும் பொருட்களாக ராமர் கொடி, பேனர், தொப்பி, டிசர்ட், ராமர் முகம் கொண்ட பிரின்ட் செய்யப்பட்ட குர்தா அதிகளவில் தேவைப்படுகிறது. இதேபோல் ராமர் கோவிலின் மாதிரி வடிவம் இதுவரையில் 5 கோடி சிறு விற்பனையாளர்கள் இந்தியா முழுவதும் விற்பனை செய்துள்ளனர்.
இதைத் தாண்டி, உணவு பொருட்கள், குளிர்பானங்கள், ஸ்னாக்ஸ், மருந்துப் பொருட்கள், டாக்சி சேவைகள், விடுதிகள் எனப் பலவற்றுக்கு அதிகப்படியான டிமாண்ட் அயோத்தியில் உருவாகியுள்ளது. ஒரு புதிய நகரத்துக்கும், அதிகப்படியான மக்கள் வரும்போது என்னவெல்லாம் தேவைப்படுமோ அனைத்திற்கும் டிமாண்ட் உருவாகியுள்ளது.
சொல்லப்போனால் ஒரு குட்டி திருப்பதி, அயோத்தியில் உருவாகி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications