சென்னை: 1.10 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தின் உரிமையாளர் சொந்தமாக செல்போன் கூட இல்லை. ஸ்ரீராம் குழுமம் என்பது தமிழ்நாட்டில் புகழ்பெற்ற ஒரு நிதி நிறுவனம் ஆகும். இதனை நிறுவிய ராமமூர்த்தி தியாகராஜன் சொந்தமாக செல்போன் கூட பயன்படுத்த மாட்டாராம் . தற்போது கூட தன்னுடைய பழைய 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை மட்டுமே இவர் பயன்படுத்துகிறார்.
ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் தியாகராஜன் சென்னையை சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தொடக்கத்தில் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். தன்னுடைய 37ஆவது வயதில் தியாகராஜன் வேலையை விட்டு விட்டார்.

அப்போது பாரம்பரியமாக செயல்பட்டு வரக்கூடிய வங்கிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வந்து எளிமையாக கடன் வாங்குவதற்கு அணுக முடியாதவையாக இருக்கின்றன என்பதை உணர்ந்தார். எனவே குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள் உள்ளிட்ட பிரிவினருக்காக கடன் வழங்கும் ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என முடிவு செய்தார். அவ்வாறு தான் ஸ்ரீராம் நிறுவனம் தொடங்கப்பட்டது .
ஸ்ரீராம் குழுமத்தை தொடங்கிய தியாகராஜன் சரக்கு வாகனங்களை வாங்குவதற்காக கடன்களை வழங்கத் தொடங்கினார். இதனை அடுத்து குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு சிறிய அளவிலான கடன்களை வழங்கத் தொடங்கினார். இவ்வாறு படிப்படியாக இவரது நிறுவனம் மக்களிடையே பிரபலம் அடைய தொடங்கியது. சீட்டு நடத்தி மக்களிடம் பணத்தை டெபாசிட்டாக பெற்று , அதனை கொண்டு நிறுவனத்தை வளர்த்தால்.
1960களில் தொடங்கப்பட்ட ஸ்ரீராம் நிறுவனம் 1974 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஸ்ரீராம் சிட் பண்ட்ஸ் நிறுவனம் என்றானது. 1979 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் பெயரை ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் கம்பெனி என மாற்றம் செய்யப்பட்டது.
1984 ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனம் தற்போது வீட்டு கடன், காப்பீடு ,போக்குவரத்து, நிதி மேலாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் என பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 70 ,400 கோடி ரூபாய் ஆகும். ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தை இவ்வளவு பெரிய உயரத்திற்கு அழைத்து சென்ற தியாகராஜன் தன்னிடம் இருந்து 6,120 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஊழியர்களுக்கு வழங்கியதில் தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தார்.
எளிமையின் அடையாளமாக திகழும் இவர் சாமானிய மக்களுக்கு பயன் தரும் தொழிலை தொடங்கினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications