இந்தியாவின் மிகப்பெரிய ஆயுர்வேத நிறுவனங்களில் ஒன்றான பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவ், தனது நிறுவனத்திற்கு எதிராக சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். பெரு நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கொண்ட கும்பல் தங்களுக்கு எதிராக வேலை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பதஞ்சலியின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியில், இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளதாக பாபா ராம்தேவ் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, இயற்கை பொருட்கள் மற்றும் ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்காக நம்பப்படும் பதஞ்சலியின் நற்பெயரை கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் நாங்கள் முதலீட்டாளர் மதிப்பைச் சேர்ப்பது, விநியோகம் மற்றும் விற்பனையை அதிகரிப்பது, ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் ஈகாமர்ஸ் போன்ற எங்கள் வளர்ச்சி திட்டங்களில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.
எவ்வளவு தடைகள் மற்றும் போராட்டங்கள் இருந்த போதிலும், நாங்கள் அடைய நினைத்த இடத்தை அடைந்துள்ளோம். நாங்கள் எந்த உதவியினாலும் இங்கு வரவில்லை... இந்தியாவின் நுகர்வோர் காரணமாக தான் நாங்கள் இங்கு இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
பதஞ்சலியின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் அஸ்தானா கூறுகையில், பதஞ்சலி மூலிகை டூத் பேஸ்ட் சந்தையில் மூன்றில் இரண்டு பங்குகளைக் கொண்டுள்ளது மற்றும் நாட்டின் நான்காவது பெரிய பிஸ்கட் விற்பனையாளராக உள்ளோம். கடந்த வருடம் மட்டும் 1600 கோடி ரூபாய் வரையிலான வருவாய் ஈட்டியுள்ளோம். எங்களின் 10 பிராண்டுகள் சிறந்த முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. சந்தைப் பங்காக இருந்தாலும் சரி, விநியோகமாக இருந்தாலும் சரி, எங்களின் வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் தங்களின் ஆயுர்வேத தயாரிப்புகளுக்கு அலோபதி மருத்துவத்திற்கு எதிராக ஆதாரமற்ற தகவல்களுடன் விளம்பரம் செய்தது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆகியோரை உச்சநீதிமன்றம் நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டிருந்தது. அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் மன்னிப்பு கூறினார். பின்னர் நாளிதழ்களிலும் நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.
பாபா ராம்தேவின் குற்றச்சாட்டுகளில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஆயுர்வேத மருத்துவ முறைகளின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் பதஞ்சலி நிறுவனம் முக்கிய பங்கு வகித்துள்ளது. வரும் காலங்களில், தரமான பொருட்கள், அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி மற்றும் நேர்மையான வணிக நெறிமுறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் தனது தலைமை நிலையை பதஞ்சலி நிறுவனம் தக்க வைத்துக்கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications