கடந்த சில நாட்களுக்காக கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து எப்படி அதிகப்படியாக இணையத்தில் பேசப்பட்டு வருகிறதோ அதற்கு இணையாக Rameshwaram Cafe என்ற சிறிய ஹோட்டல் பெங்களூர் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அப்படி என்ன இந்த கடையில் ஸ்பெஷல் என்றால் ஒரு சிறிய ஹோட்டல் மாதத்திற்கு 4.5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதை விட என்ன ஸ்பெஷலான விஷயம் இருக்க போகிறது.

பி2பி வர்த்தக பிரிவுக்கான நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான UDAAN நிறுவனத்தின் இணை நிறுவனர் சுஜீத் குமார், சமீபத்தில் ஒரு பிரபலமான போட்காஸ்ட் வீடியோவில் Rameshwaram Cafe கடையை பற்றிய சில வியக்க வைக்கும் விஷயங்களை பகிர்ந்தார். இதன் மூலம் இணைய உலகில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகியுள்ளது.
சுஜீத் குமார் இந்த போட்காஸ்ட்-ல் பேசுகையில் ராமேஸ்வரம் ஹோட்டலைப் பார்த்தால், ஒரு நாளைக்கு சுமார் 7,500 பில்கள் போடப்படுகிறது. 10க்கு 10 அல்லது 10க்கு 15 சதுர அடி அளவில் இருக்கும் ஒரு சிறிய கடையில். மாதம் 4.5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்து ஆண்டுக்கு ரூ. 50 கோடி வியாபாரம் செய்கிறது. இதைவிட முக்கியமாக சுமார் 70 சதவீத மார்ஜின் பெறுகின்றனர்.
பெங்களூர் டெக் சந்தையில் முதலீடு சரிவு, வர்த்தகம் பாதிப்பு என பல பிரச்சனைகள் குறித்து பேசப்பட்டு வரும் வேளையில் 4 டெக் நிறுவன தலைவர்கள் பங்கேற்ற பாட்கேஸ்ட்டில் அதிகம் லாபம் கிடைக்கும் வர்த்தகம் மற்றும் டிரெண்டிங் ஆன பிஸ்னஸ் குறித்து பேசும் போது சுஜீத் குமார் ராமேஸ்வரம் ஹோட்டல் பற்றி பேசினார்.
ராமேஸ்வரம் ஹோட்டல் இந்தியாவில் முத்திரை பதித்த QSR பிராண்டுகள் உடன் ஒப்பிட்டும் பேசப்பட்டது. UDAAN நிறுவனத்தின் இணை நிறுவனர் சுஜீத் குமார் எட்டெக் யூனிகார்ன் நிறுவனமான அனாகாடமி மற்றும் காபி செயின் தேர்ட் வேவ் காபி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட முதலீடுகளைச் செய்திருப்பதாகவும் இந்த பாட்கேஸ்ட்டில் பகிர்ந்து கொண்டார்.
இந்த பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் UDAAN நிறுவனத்தின் இணை நிறுவனர் சுஜீத் குமார், இந்திய பங்கு தரகு நிறுவனமான Zerodha இன் இணை நிறுவனர் நிகில் காமத், Future Group இன் நிறுவனர் கிஷோர் பியானி, மற்றும் Meesho இன் இணை நிறுவனர் Vidit Aatrey ஆகியோரும் கலந்துக்கொண்டு பேசினர்.
Zerodha இன் இணை நிறுவனர் நிகில் காமத் உருவாக்கிய போட்காஸ்ட் தொடரின் மூன்றாவது எபிசோட்ல் ராமேஸ்வரம் ஹோட்டல் குறித்து பேசப்பட்டது. இந்த பாட்கேஸ்ட் 'WTF ஈ-காமர்ஸ்' என்று தலைப்பில் பேசப்பட்டது.

இந்த பாட்கேஸ்ட்-ல் இந்திய சில்லறை விற்பனை சந்தை, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளத்தில் வணிகத்தை வளர்ப்பது, இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டு சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டன.
சுஜீத் குமார் 2008 முதல் 2016 வரை ஈகாமர்ஸ் நிறுவனமான ஃபிளிப்கார்ட்டில் ஆப்ரேஷன்ஸ் பிரிவின் இயக்கத் தலைவராகப் பணியாற்றினார். 2016 க்கு பின்பு வால்மார்ட் கட்டுப்பாட்டில் இருந்த பிளிப்கார்ட்-ல் இருந்து வெளியேறி சுஜீத் குமார், முன்னாள் பிளிப்கார்ட் நிர்வாகிகளான அமோத் மாளவியா மற்றும் வைபவ் குப்தாவுடன் இணைந்து UDAAN நிறுவனத்தை தொடங்கினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications