பெங்களூரின் மிக பிரபலமான ராமேஸ்வரம் கஃபே, சமீபத்தில் தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் மாதாப்பூர் பகுதியில் இவர்களது கிளை அண்மையில் திறக்கப்பட்டது. இந்நிலையில், தெலுங்காணா உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று (மே 23) திடீர் சோதனை நடத்தினர். அப்போது அதிர்ச்சியளிக்கும் பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வந்து மட்டும் அல்லாமல் ராமேஸ்வரம் கஃபே-வின் பிராண்ட் மதிப்பில் பெரிய ஓட்டை விழுந்தது.
சோதனையில், ஹோட்டலின் சமையலறையில் காலாவதியான மற்றும் லேபிள் இல்லாத உணவுப் பொருட்கள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

சுமார் 100 கிலோ கடலைப்பருப்பு (₹16,000 மதிப்பு), 10 கிலோ நந்தினி தயிர் மற்றும் 8 லிட்டர் பால் ஆகியவை அவற்றின் காலாவதி தேதியைக் கடந்து பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டிருந்தன. மேலும், 450 கிலோ அரிசி, 20 கிலோ வெள்ளை லோபியா மற்றும் 300 கிலோ லேபிள் இல்லாத வெல்லம் ஆகியன முறையற்ற முறையில் சேமிக்கப்பட்டிருந்ததை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இவை அனைத்தையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுமட்டுமின்றி, உணவு தயாரிப்பாளர்களுக்கான கட்டாய மருத்துவ தகுதிச் சான்றிதழ்களையும் ஹோட்டல் நிர்வாகம் வழங்கவில்லை. மேலும், உணவு பாதுகாப்பு விதிமுறைகளின்படி குப்பைகளை மூடுவதற்கான மூடிகளைக் கூட பயன்படுத்தவில்லை என்பதும் கண்டறியப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு உணவகங்களில் சுகாதார தரநிலைகளில் குறைபாடுகள் இருப்பதைக் கண்டறிந்த உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்ட நடவடிக்கையில் இதுவும் ஒன்று.
அதே நாளில், பாகுபலி கிச்சன் என்ற மற்றொரு உணவகத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுப்பொருட்களில் கரப்பான் பூச்சிகள் நிறைந்திருப்பதைக் கண்டறிந்தனர். அந்த ஹோட்டலின் சுகாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, பாகுபலி கிச்சன் உரிமையாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
நெய் தோசை மற்றும் இட்லி ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல், இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹைதராபாத்தின் மாதாப்பூர் பகுதியில் தனது கிளையை திறந்தது. பல பிரபலங்களும் உணவு ஆர்வலர்களும் வந்து செல்லும் இந்த ஹோட்டலுக்கு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்து வருகிறது.
ஆனால், இந்த உணவு பாதுகாப்பு மீறல், அதன் நற்பெயர் மீது கரும்புள்ளியாக உள்ள. இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இவர்களது குண்டலஹள்ளி கிளையில் மார்ச் 1 ஆம் தேதிக் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து பலர் காயமடைந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது இக்கிளை முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications