தொழிலதிபர்கள் டிரெண்டுக்கு ஏற்றவாறு தங்கள் தொழிலில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்வார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் தற்போது இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த டிரெண்டை பயன்படுத்தி 'தம்பி வேட்டி' என்ற புதிய வேட்டியை ராம்ராஜ் காட்டன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
செஸ் போர்டில் உள்ள குதிரையை தம்பி என்று தமிழக அரசு அறிமுகம் செய்து அதனை விளம்பரங்களில் பயன்படுத்தி வரும் நிலையில் அந்த தம்பிக்கு புதிய வேட்டியை அறிமுகம் செய்துள்ள ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஐடியா பக்காவாக வொர்க்-அவுட் ஆகிகியுள்ளதாக கூறப்படுகிறது.
செஸ் ஒலிம்பியாட்
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தமிழக அரசு சிறப்பாக நடத்தி வருகிறது. 187 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 2000 செஸ் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்ட இந்த போட்டி தமிழக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின்
இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தங்களது புதிய அறிமுகமான 'செஸ் ஒலிம்பியாட் தம்பி வேட்டி'யை வழங்கினார்.
தம்பி
சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வித்தியாசமாக விளம்பரம் செய்து வரும் தமிழக அரசு செஸ் போர்டில் உள்ள குதிரையை 'தம்பி' என அழைத்து அதற்கு வேட்டி, சட்டை அணித்து பிரபலமாக்கி வருகிறது. எனவே எப்போது எங்கு பார்த்தாலும் 'தம்பி' என்ற சொல் மக்களின் குரலாக ஒலித்து வருகிறது.
ராம்ராஜ் காட்டன் நிறுவனம்
இந்த 'தம்பி' டிரெண்டை மிகச்சரியாக தங்கள் வணிகத்திற்கு பயன்படுத்தி கொண்ட ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 'தம்பி' என்ற புதிய வகை வேட்டியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஐடியா சூப்பராக வொர்க்-அவுட் ஆகி தற்போது இளைஞர்கள் மத்தியில் 'தம்பி' வேட்டி பிரபலமாகி வருகிறது.
கலாச்சாரம் - பாரம்பரியம்
இதுகுறித்து ராம்ராஜ் காட்டன் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எங்கள் தயாரிப்புகளான பிரீமியம் காட்டன் வேட்டிகள் மற்றும் சட்டைகள் அனைத்தும் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கின்றன. ராம்ராஜ் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியிருந்தாலும், இன்றைய ஃபேஷன் மற்றும் நவீன போக்குகளுக்கு ஏற்ப வேட்டிகளை சந்தைப்படுத்துகிறோம். இன்று, ராம்ராஜ் நிறுவனம், அனைத்து வயதினருக்கும் வேட்டிகளை அறிமுகம் ச்செய்து வருகிறது.
தம்பி வேட்டி
இந்த நிலையில் எங்கள் ராம்ராஜ் நிறுவனம் மூலம் புத்தம் புதிய 'தம்பி வேட்டி' என்பதை அறிமுகம் செய்துள்ளோம். குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் இந்த வேட்டி ஒரு சிறப்பு வெளியீடு ஆகும். செஸ் போர்டில் உள்ள கருப்பு வெள்ளை பார்டருடன் கூடிய இந்த வேட்டி, இந்தியாவில் தோன்றிய விளையாட்டின் பாரம்பரியம் மற்றும் பெருமையை எதிரொலிக்கிறது. இந்த வேட்டி அணிபவரின் வசீகரத்தையும் நேர்த்தியையும் உயர்த்துகிறது என அவர் மேலும் கூறியுள்ளார்.
நடிகர் ஜெயராம்
தம்பி வேட்டியை இளைஞர்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக நடிகர் ஜெயராமை கொண்ட விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications