இந்தியாவிலேயே அதிகம் சம்பளம் தரும் நகரங்களின் பட்டியலில் பெங்களூருவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ஐடி துறையின் வளர்ச்சியினாலே அதிக சம்பளம் பெங்களூருவில் கொடுக்கப்படுகிறதாம்.
அதிலும் நாட்டிலேயே அதிக சம்பளம் வழங்கும் துறையாகவும் ஐடி துறை உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பெங்களூருவில் சம்பள விகிதம்
அதிலும் தொடர்ந்து பெங்களுரு தொடர்ந்து மூன்று முறையாக முதலிடத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராண்ஸ்டாட் இன்சைட்ஸ் ஊதிய ட்ரெண்ட்ஸ் ரிப்போர்ட் 2019 அறிக்கையின் படி, பெங்களூருவில் ஜூனியர் நிலை ஊழியரின் சம்பளம் ஆண்டுக்கு சராசரியாக 5.27 லட்சம் ரூபாய் ஆக உள்ளதாம். இதேபோல், நடுத்தர ஊழியரின் சம்பளம் ஆண்டுக்கு 16.45 லட்சம் ரூபாயாகவும், சீனியர் லெவல் ஊழியர்களின் சம்பளம் 35.45 லட்சம் ரூபாய் ஆக உள்ளதாம்.
பெங்களூருவிற்கு அடுத்த இடங்கள்
பெங்களூருவை அடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்கள் இடம் பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் ஜூனியர் நிலை ஊழியரின் சம்பளம் 5 லட்சம் ரூபாய் ஆகவும், இதே ஜூனியர் நிலை ஊழியருக்கு மும்பையில் 4.59 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இதே மும்பையில் நடுத்தர ஊழியரின் சம்பளம் 15.07 லட்சம் ரூபாயாகவும், மூத்த அதிகாரிகளுக்கு 33.95 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. இதே புனேவில் மூத்த அதிகாரிகளுக்கு சம்பளம் 32.68 லட்சம் ரூபாயாக உள்ளது.
தகவல் தொழிலநுட்ப துறையில் அதிக சம்பளம்
ரான்ஸ்டாட் அறிக்கையில், தகவல் தொழில்நுட்ப துறையை சேர்தவர்களுக்கு அதிகம் சம்பளம் வழங்கப்படுவதாக வெளிப்படுத்துகிறது. இது ஆரம்ப நிலை ஜூனியர் ஊழியர்களுக்கு சராசரியாக 4.96 லட்சம் ரூபாயும், இதே சீனியர் லெவல் மூத்த அதிகாரிகளுக்கு 35.84 லட்சம் ரூபாயும் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
யாருக்கு அதிக சம்பளம்?
இந்த அறிக்கையில் அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியியலில் டிஜிட்டல் திறங்களைக் கொண்ட நபர், கிளவுட் ஸ்கில்ஸ், ஏஐ & ஆட்டோமேஷன் உள்ளிட்ட துறையை சேர்ந்தவர்கள் அதிக சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் தவிர ஜிஎஸ்டி இணக்க வல்லுனர்கள், கணக்காளர்கள், மேலாண்மை ஆலோசகர்கள், வக்கீல்கள், ஆகியோருக்கு தேவை அதிகரித்து வருவதால் இது அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது துறையாகவும் உள்ளது. இவர்களின் நடுத்தர ஊழியர்களின் சம்பளம் 15.3 லட்சம் ரூபாய் என்றும் கூறப்படுகிறது.
அதிக திறன் உள்ளவர்களுக்கு அதிக வாய்ப்பு
செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் போன்ற டிஜிட்டல் திறன்கள் கொண்டோருக்கான பணி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம். இத்திறன்கள் கொண்டோருக்கே அதிக சம்பளமும் ஐடி துறையில் வழங்கப்படுகிறதாம். ஐடி துறைக்கு அடுத்து ஜிஎஸ்டி வல்லுநர்கள், கணக்காளர்கள், கன்சல்டன்ட் சேவை தருவோர், வழக்கறிஞர்கள் ஆகியோர்களுக்கான தேவை அதிகம் உள்ளதால் ஊதியம் அதிகம் உள்ளதாம்.
யார் யாரிடம் ஆய்வு?
இந்த சம்பளம் குறித்தான ஆய்வை ரான்ஸ்டாட் இந்தியா நுண்ணறிவு சம்பள போக்குகள் அறிக்கை 2019, எட்டு முக்கிய நகரங்களில் பரவியுள்ள, 15 தொழில் துறைகளில், சுமார் 1 லட்சம் வேலைகளை ஆய்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில் இருக்கும் வேலைவாய்ப்பே நிலைக்குமா? இருக்குமா? இருக்காதா என்ற நிலையில், இப்படி ஒரு அறிக்கை ஊழியர்களூக்கு நம்பிக்கையை கொடுக்கும். ஊழியர்களின் தங்களின் திறங்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் எந்த எல்லையும் தொட்டுவிடமுடியும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications