முதல் தலைமுறை தொழிலதிபர்களுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தாலும் தோல்வி அடையும் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் 2 தொழில்களைத் துவங்கி தோல்வி அடைந்த பின்பு பாதுகாப்பான மத்திய அரசின் வேலைக்கான நியமன கடிதம் வந்த போதும் அதைக் கிழித்துப்போட்டு விட்டு புதிய தொழிலை துவங்கி தயாரானவர் தான் ரங்கா ராவ்.
சுதந்திர இந்தியா
1947க்குப் பின் இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், நிதி நிலை அனைத்தும் மோசமாக இருந்த காலகட்டத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பது எந்த அளவிற்கு முக்கியமானது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
ரங்கா ராவ்
ஆனாலும் மத்திய அரசு வேலையைத் தூக்கி எறிந்த ரங்கா ராவ் 1948ஆ ம் ஆண்டு மைசூரில் வாசு & சைக்கிள் பிராண்ட் என் நிறுவனத்தை உருவாக்கினார். இந்த நிறுவனம் தான் தற்போது சைக்கிள் பிராண்ட் ஆக மாறி சுமார் 65 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
வர்த்தகத்தில் தோல்வி
1946ல் என்.ரங்கா ராவ் டிரேடிங் மற்றும் பால் வியாபாரத்தில் தோல்வி அடைந்தார், அரசு வேலைக்கு விண்ணப்பம் செய்ய விரும்பாத ரங்கா ராவ் பல்வேறு காரணங்களுக்காக விண்ணப்பம் செய்தார். 1948 அரசு வேலை கிடைத்தும் பணி நியமன கடிதத்தைக் கிழித்துப் போட்டுத் தொழில் துவங்கியதாக ரங்கா ராவ் மகன் தெரிவித்துள்ளார்.
4000 ரூபாய்
1948ல் ரங்கா ராவ் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து 4000 ரூபாய் தொகையுடன் பெரிய ரிஸ்க் உடன் ஊதுபத்தி வர்த்தகத்தைத் துவங்கினார். மனைவி, வயதான தாயார், 4 பிள்ளைகள் உடன் ரங்கா ராவ் Vasu & Cycle Brand Agarbathies என்னும் நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
NR Group வளர்ச்சி
1948ல் 4000 ரூபாய் கடனில் துவங்கிய வர்த்தகம், 1958ல் 10 லட்சத்திற்கும் அதிகமான வருமானத்தைப் பெற்றுள்ளது ரங்கா ராவ்-ன் வாசு & சைக்கிள் பிராண்ட் அகர்பத்தி நிறுவனம். இன்று இந்த நிறுவனம் NR Group ஆகிய இயங்கி வருவது மட்டும் அல்லாமல் ரங்கா ராவ் குடும்பத்தின் 3வது தலைமுறையினர் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
மோகன் ரங்கா ராவ்
இந்த முக்கியத் தகவல் அனைத்தையும் தனது தந்தையின் பிறந்த நாளில் அவருடைய மகனும் Arvee Syntthesis நிர்வாகத் தலைவர், முன்னாள் அகர்பத்தி நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னரான மோகன் ரங்கா ராவ் தனது லின்கிடுன் தளத்தில் தெரிவித்தார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications