லண்டன் தொழிலதிபர் சஞ்சய் கபூரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அவரது தாயாரும் இந்தியாவின் முன்னணி மோட்டார் உற்பத்தி நிறுவனமான சோனா காம்ஸ்டார்-இன் முன்னாள் தலைவியுமான ராணி கபூர் போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள புகாரில், "என் மகன் சஞ்சய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உண்மைகள் வெளிவர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சஞ்சய் கபூரின் மரணம் விபத்தாகவோ அல்லது இயற்கையாகவோ நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.

மேலும், இந்த வழக்கில், கொலை, உடந்தையாக இருத்தல், சதி, மோசடி மற்றும் ஆவண திருட்டு உட்பட பல்வேறு குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும், தன் மகனின் 3-வது மனைவியான பிரியா சச்தேவ் கபூர் மற்றும் அவரது மரணத்தால் பொருளாதார ரீதியாக ஆதாயம் அடைந்த மற்றவர்களை நோக்கியே உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அவர் எழுதியுள்ள கடிதத்தில், போலி ஆவணங்கள், சந்தேகத்திற்குரிய சொத்து மாற்றங்கள் மற்றும் சட்டப் பதிவுகள் பற்றிய ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன் மகனின் மரணம் குறித்து குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கொலை மற்றும் சதி உள்ளிட்ட பிரிட்டிஷ் சட்டங்களின் கீழ் இந்த குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், என் மகனுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. எனக்கு வயதாகிவிட்டது. இதுபற்றிய உண்மை தெரியாமல் நான் போய்விடக்கூடாது. இது ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "சோனா நிறுவனம் தொடங்கிய நாட்கள் இன்னும் என் மனதில் உள்ளது. அது பல தியாகங்களும், அக்கறையும், நம்பிக்கையும் கொண்டு கட்டப்பட்டது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு எனக்கு எந்தவொரு பங்கும் கிடையாது என்று நிறுவனம் கூறிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், Sona BLW Precision Forgings Ltd, பங்கு சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தில் அளித்த பதிலில், ராணி கபூர் கூறியவை அடிப்படையற்றதும், சட்டரீதியாக ஏற்க முடியாததும் எனக் கூறி திட்டவட்டமாக மறுத்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு ராணி கபூர் நிறுவனத்தில் எந்தவொரு அதிகாரத்தையும், பதவியையும் வகிக்கவில்லை என்று தெரிவித்தது.
இதற்கிடையே, அந்நிறுவனத்திற்கு ராணி கபூர் எழுதிய பதில் கடிதத்தில், "தனது மகன் சஞ்சயின் மரணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, சில ஆவணங்களில் நான் கட்டாயப்படுத்தப்பட்டு கையெழுத்திடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனது வங்கி கணக்குகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிலர் மீது நம்பிக்கையுடன் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சோனா காம்ஸ்டார் நிறுவனம் ராணி கபூருக்கு அனுப்பி சட்ட நோட்டீஸில், "தவறான மற்றும் பிரச்சனையை ஏற்படுத்தும் தகவல்களை பரப்புவதை நிறுத்துங்கள்" என்று எச்சரித்துள்ளது. ராணி கபூர் துவக்கத்தில் இருந்தே தவறானவை, ஆதாரமற்றவையாக உள்ளது என தெரிவித்துள்ளது.
தற்போது வயதும், உடல்நலக் காரணங்களாலும், ராணி கபூர் இனி பொது மன்றங்களில் பேசாமல் இருக்க முடிவு செய்துள்ளார். ஆனால், என் சட்டத் துறை இந்த வழக்கை முன்னெடுத்து, நீதிக்காக தொடர்ந்து போராடும் என்று தெரிவித்துள்ளார்.
சோனா காம்ஸ்டார் : சோனா காம்ஸ்டார் (Sona BLW Precision Forgings Ltd அல்லது Sona Comstar) என்பது, இந்தியாவை தலைமையிடமாக கொண்ட ஒரு முன்னணி ஆட்டோமொபைல் கூறுகள் தயாரிப்பு நிறுவனம். வாகனத் துறையில் (EV sector) முக்கிய பங்கு வகித்து வரும் இந்நிறுவனம், டிரைவ் சிஸ்டம்கள், பவர் டிரெயின் கூறுகள், மோட்டார் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயர் நுட்ப உதிரி பாகங்கள் ஆகியவற்றை வடிவமைத்து தயாரிக்கிறது.
1987ஆம் ஆண்டு தொழிலதிபர் சூரி கபூர் மற்றும் அவரது மனைவி ராணி கபூர் இணைந்து இந்த நிறுவனத்தை நிறுவினர். ஆரம்பத்தில் சிறிய அளவில் இயங்கிய சோனா, தொடர்ந்து பல்வேறு தொழில்நுட்ப கூட்டணிகள், பன்னாட்டு வாடிக்கையாளர்கள் மூலம் உலகளவில் ரீதியில் முக்கிய இடத்தைப் பிடித்தது.
இந்நிறுவனம் தற்போது, அமெரிக்கா, ஜெர்மனி, மெக்சிகோ, சீனா மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் உற்பத்தி நிலையங்களையும், உலகின் முன்னணி வாகன நிறுவனங்களுடன் வாடிக்கையாளர் உறவுகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications