டாடா மோட்டார்ஸ் தனது வாகன உற்பத்தியை அதிகரிக்கத் தமிழ்நாட்டில் புதிய மற்றும் மெகா முதலீட்டுத் திட்டத்தை அறிவித்து ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையை குஷிப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வருடத்தில் ஹூண்டாய், வின்பாஸ்ட், டாடா மோட்டார்ஸ் என 3 பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் ராணிப்பேட்டையில் சுமார் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் 5000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை அளிக்கும் வகையில் புதிய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கும் வழியை ஆராயத் தமிழ்நாட்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த முதலீடு அடுத்த 5 வருடத்தில் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளது டாடா மோட்டார்ஸ். ஆனால் ராணிப்பேட்டைக்கும் டாடா மோட்டார்ஸ்-க்கும் பல வருட வர்த்தக பந்தம் உள்ளது எத்தனை பேருக்கு தெரியும்..?
டாடா குழுமம் முதல் முறையாக ராணிப்பேட்டையில் முதலீடு செய்தது ஒரு காலணி அதாவது ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் தான். 1974ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரில் Jai Bharat Tanners என்று துவங்கப்பட்டு, 1985ல் ராணிப்பேட்டையில் Bachi Shoes என்ற பெயரில் உருவான மாபெரும் காலணி சாம்ராஜ்ஜியம் தற்போது நாட்டின் முன்னணி காலணி ஏற்றுமதி நிறுவனமாக உள்ளது.
2010ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் இருந்துகொண்டு ஐரோப்பியா, அமெரிக்காவுக்கு காலணியில் பெரும் வர்த்தகத்தையும், வருமானத்தையும் ஈட்டி வந்த Bachi Shoes நிறுவனத்தில் டாடா இண்டர்நேஷ்னல் நிறுவனம் சுமார் 76 சதவீத பங்குகளை வாங்கி தனது முதல் முதலீட்டை ராணிப்பேட்டையில் செய்தது.
டாடா இண்டர்நேஷ்னல் நிறுவனம் தோல் பொருட்கள், குளோபல் டிரேடிங், பீட்சையின்ஸ் மற்றும் tagra ஆகியவற்றின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.
டாடா இன்டர்நேஷனல், ஃபினிஷ்ட் அதாவது முழுமையாகத் தயாரிக்கப்பட்ட லெதர் மற்றும் காலணிகளின் இந்தியாவின் முன்னணி ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர் மற்றும் விநியோகச் சங்கிலி ஒருங்கிணைப்பாளர் ஆகும். டாடா இன்டர்நேஷனல் 35 நாடுகளுக்கு பல்வேறு விதமான காலணிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.
இதன் அடித்தளம் ராணிப்பேட்டையில் அமைந்துள்ளது, இதுமட்டும் அல்லாமல் கார்களுக்கு பயன்படுத்தும் தோல் பொருட்கள் பெருமளவில் டாடா இன்டர்நேஷனல் தான் தயாரிக்கிறது, இதில் குறிப்பாக டாடா மோட்டார்ஸ் கார்களுக்கான தோல் பொருட்கள் அடங்கும்.,
டாடா இன்டர்நேஷனல் தற்போது ஜீப் காம்பஸ், ஹோண்டா, ஆல்பைன்ஸ்டார்ஸ், மெர்ரெல் மற்றும் மாருதி ஆகிய பிராண்டுக்களுக்கான, Genuine Accessories தயாரித்துத் தரும் இந்தியாவின் ஒரே லெதர் வசதியை டாடா இன்டர்நேஷனல் இயக்கி வருகிறது.
மேலும் Clarks, Caleres, Deichmann, Gabor, Hushpuppies, Zara, H&M, Marks & Spencer, Timberland போன்ற முக்கிய உலகளாவிய காலணி பிராண்டுகளுடன் நீண்ட கால தொடர்பையும் கொண்டுள்ளது. மேலும் AlpineStars, Cole Haan, Diesel, Fossil, மற்றும் ஜியோர்ஜியோ அர்மானி போன்ற ஆடை பிராண்டுகள் உடனும் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் வாலாஜாபேட்டை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரு பகுதிகளில் அதிநவீன உற்பத்தி தளங்களும், சீனா மற்றும் போர்ச்சுகலில் மேம்பாட்டு மையங்கள், இத்தாலியில் உள்ள டிசைன் ஸ்டுடியோ கொண்டு டாடா இண்டர்நேஷ்னல் இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications