சென்னை - பெங்களூர் தொழிற்துறை பகுதியில் புதிய இண்டஸ்ட்ரீயல் ஹப் ஆக மாறும் ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்தடுத்து முக்கிய முதலீடுகளையும், விரிவாக்கத்தையும் பெற்று வருகிறது. ராணிப்பேட்டை அமைந்துள்ள இடம் ஏற்றுமதிக்கும், குறைவான ரியல் எஸ்டேட் விலை, அதிகப்படியான திறமைமிக்க ஊழியர்கள், சென்னை துறைமுகங்கள் உடன் இணைப்பு, பிற தொழிற்துறை பகுதி உடனான இணைப்பு என பல நன்மைகளைக் கொண்டு இருக்கும் காரணத்தால் குட்டி ஓசூர், குட்டி ஸ்ரீபெரும்புதூராகவும் உருவெடுத்து வருகிறது.
இதில் துவக்க புள்ளியாகத் தமிழ்நாடு அரசு, பனப்பாக்கம் பகுதியில் உருவாக்கிய சிப்காட் பகுதியில் சனிக்கிழமை சுமார் 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜாகுவார் ரேஞ்ச் ரோவர் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்திற்கு டாடா மோட்டார்ஸ் அடிக்கல் நாட்டியது. இது மிகவும் முக்கியமான முதலீடாக பார்க்கப்படுவது மட்டும் அல்லாமல் ஏற்றுமதிக்காக அதிகப்படியான கார்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டு உள்ளதால் ஏற்றுமதி வர்த்தகமும் இத்தொழிற்சாலை மூலம் மேம்படும்.

இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்கும், இப்பகுதியில் அடுத்தடுத்து வரும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைக்கும் நிலையான உதிரிப்பாகங்கள் மற்றும் பிற முக்கியமான சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ராணிப்பேட்டை அருகே ஆட்டோமொபைல் சப்ளை பார்க் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜாகுவார் ரேஞ்ச் ரோவர் தொழிற்சாலையின் முழு சப்ளை செயினும் உள்ளூர் மயமாக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய இத்தொழிற்சாலைக்கு அருகிலேயே சப்ளையர் பார்க் உருவாக்க வேண்டும் என தொழில்துறைக்கு உத்தரவிட்டு உள்ளார்.
இந்த சப்ளையர் பார்க்-ல் அதிகப்படியான MSME நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க வழிவகுக்கும். இதனால் உருவாகும் வேலைவாய்ப்புகள் மூலம் ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் டாடா தொழிற்சாலையை மட்டுமே சார்ந்திருக்கும் நிலை இருக்காது.
ஓசூர் நகரமும் ஆரம்பத்தில் MSME நிறுவனங்களுக்கான கூடாரமாகவே இருந்தது, பின்னாளில் தான் ஓலா முதல் ரோல்ஸ் ராய்ஸ் வரை இப்பகுதியில் முதலீடு செய்ய வழிவகுத்துள்ளது. ஓசூர், ஸ்ரீபெரும்புதூர், கோயம்புத்தூர் ஆகிய 3 தொழிற்துறை பகுதியும் இதே கட்டமைப்பில் தான் உருவானது. தற்போது இதே வழியை ராணிப்பேட்டையிலும் பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் TRB ராஜா கூறுகையில் "ராணிப்பேட்டையில் அமைக்கப்படும் சப்ளையர் பார்க் மூலம் டாடா மோட்டார்ஸின் கார் தயாரிப்புக்குப் பெரிய அளவில் வலுசேர்க்கும், கார்களுக்கான பாகங்களைப் பெறச் சிறப்பான கட்டமைப்பை உருவாக்க முடியும். இதன் மூலம் ராணிப்பேட்டை அருகே வலுவான உதிரிப்பாகங்கள் உள்கட்டமைப்பு மற்றும் MSME கிளஸ்டரை உருவாக்கும்" என்று கூறினார்.
டாடா மோட்டார்ஸ்-ன் ஜாகுவார் லேண்டு ரோவர் தொழிற்சாலை மூலம் வட தமிழகத்தின் வளர்ச்சிக்கு விதையாக இருக்கும், இப்பகுதியில் குவியும் முதலீடுகள் அதிகப்படியான வேலைவாய்ப்புகளை ஈர்ப்பதோடு, ராணிப்பேட்டை மாவட்டம் வேகமாக வளர முக்கிய காரணமாக இருக்கும்.
கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டு ஆட்டோமொபைல் துறையில் ஹூண்டாய் ரூ.26,000 கோடி, வின்ஃபாஸ்ட் ரூ.16,000 கோடி, டாடா மோட்டார்ஸ் ரூ.9,000 கோடி, ரெனால்ட்-நிசான் ரூ.3,000 கோடி, Stellantis ரூ.2,000 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க கார் நிறுவனமான ஃபோர்டு தமிழ்நாட்டில் மீண்டும் நுழைய முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications