வேலூர் மாவட்டத்தில் இருந்து 2019ல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை தற்போது முக்கிய தொழிற்துறை பகுதியாக உருவெடுத்து வருகிறது. சமீபத்தில் டாடா-வின் 9000 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ராணிப்பேட்டை இந்திய கார்ப்ரேட் வட்டாரத்தில் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
ராணிப்பேட்டை திடீரென கவனம் பெற முக்கிய காரணம் இதன் இருப்பிடம் தான், சென்னை - பெங்களூர் வழித்தடத்திலும், தொழிற்துறை மாவட்டங்களான காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் ஓட்டியிருக்கும் காரணத்தால் உற்பத்தித் துறைக்கு ஏதுவான இடமாக உள்ளது.

ஆனால் ராணிப்பேட்டையின் வர்த்தக துறையின் வளர்ச்சி நேற்று, இன்று துவங்கியதில்லை, இதன் வளர்ச்சி கதை 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்பது பலருக்கும் தெரியாது. வேலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த காலகட்டத்தில், இரு பெரிய நகரங்களுக்கு மத்தியில் இருப்பதாலும், இப்பகுதியில் கணிசமான சிறு, குறு நிறுவனங்களைக் கவனித்த தமிழ்நாடு அரசு முதல் சிப்காட் தொழில்துறை பூங்காவை அமைத்தது.
இதுதான் ராணிப்பேட்டை பகுதியின் வலிமையான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. கடந்த 50 வருடத்தில் இப்பகுதி மெல்ல மெல்ல வளர்ச்சி அடைந்தாலும் நிலையாக வளர்ச்சி அடைந்து வந்தது இதன் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் கடந்த 50 ஆண்டுகளில் காலணிகள் தயாரிக்கும் பெரிய மற்றும் நடுத்தர அளவிலான தோல் நிறுவனங்களுக்கும், ஆடை தொழிற்சாலைகளுக்கும் இருப்பிடமாக மாறியது. இதோடு சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கெமிக்கல் தொழிற்சாலைகளும், ஃபவுண்டரிகளும் இந்த பகுதியில் வந்தன.

1980-ல், BHEL ராணிப்பேட்டையில் தனது பாயிலர் ஆக்சிலரிஸ் பிளான்ட் (BAP) ஐ அமைத்தது. இந்த 45 ஆண்டுகளில் இந்நிறுவனம் ஹீட்டர் முதல் பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள் வரையில் பலவற்றைத் தயாரிக்கும் முக்கிய தொழிற்சாலையாக வளர்ந்ததுள்ளது.
இதன் வாயிலாக ராணிப்பேட்டையில் ஏராளமான MSMEs-களை உருவாக வழிவகுத்து, தற்போது 10,000-க்கும் அதிகமான MSME நிறுவனங்களை இப்பகுதியில் உருவாக்கியது.
இந்த நிலையில் 1996 முதல் சர்வதேச பிராண்டுகளும் ராணிப்பேட்டையில் வர துவங்கியது, டிராக்டர்கள் தயாரிக்கும் இத்தாலி தலைமையிலான Same Deutz-Fahr Group (SDF) தனது தொழிற்சாலை அமைத்தது.
இதன் தொடர்ச்சியாக டாடா இன்டர்நேஷனல் நிறுவனம் கிளார்க்ஸ், டெய்ச்மேன், H&M, மார்க்ஸ் & ஸ்பென்சர், ஜாரா மற்றும் மசிமோ டுட்டி உள்ளிட்ட உலகளாவிய பிராண்டுகளுக்கு காலணிகளை உருவாக்கும் தொழிற்சாலையைக் கூட்டணியில் உருவாக்கி பின்னாளில் மொத்தமாக காப்பற்றிய தற்போது இப்பகுதியில் இருந்து ஏற்றுமதி செய்து வருகிறது.
சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது வெளிநாட்டுக் காப் பிராண்டான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க ராணிப்பேட்டையில் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்தது.
இதை தொடர்ந்து தைவான் நாட்டின் காலணி தயாரிப்பாளர் ஹாங் ஃபு அடுத்த 3-5 ஆண்டுகளில் நைக்கி மற்றும் புமா போன்ற உலகளாவிய பிராண்டுகளுக்கான ஸ்போர்ட்ஸ் ஷூ தயாரிக்க 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
இதை தொடர்ந்து பொம்மை தயாரிப்பாளர் Funskoool, கடந்த 25 ஆண்டுகளாக ராணிப்பேட்டையில் தொழிற்சாலை அமைத்து தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகிறது. ஏப்ரல் மாதத்தில், இந்த நிறுவனம் 1.6 லட்சத்திற்கும் அதிகமான சதுர அடி பரப்பளவு கொண்டு தொழிற்சாலையைச் சேர்த்து தற்போது 3,00,000 சதுர அடிக்கும் அதிகமான உற்பத்தி இடத்தை கொண்டு உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications