தமிழ்நாட்டின் விஸ்வரூப வளர்ச்சிக்கு இணையாக மாநிலம் முழுவதும் பல தொழில்துறை பகுதிகள் உருவாகி வரும் வேளையில், ராணிப்பேட்டை மிகவும் முக்கியமானதாக மாறி வருகிறது. திடீரென ராணிப்பேட்டை ஓசூர், ஸ்ரீபெரும்புதூர்-க்கு இணையாக ஒப்பிடப் பல முக்கியமான காரணம் இருந்தாலும். இதற்கு பிள்ளையார் சுழிப்போட்டது சிப்காட்-ம் டாடா-வும் தான்.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது வெளிநாட்டுக் காப் பிராண்டான ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களை தயாரிக்க ராணிப்பேட்டையில் 9,000 கோடி ரூபாய் முதலீடு செய்து புதிய தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அறிவித்தது.

இதே ஆட்டோமொபைஸ் துறையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களைத் தயாரிக்க ராணிப்பேட்டையில் 700 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலையை அமைத்த கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி, தற்போது அதை வருடத்திற்கு 10 லட்சம் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் ராணிப்பேட்டை தற்போதைய சூழ்நிலையில் ஒரு ஆட்டோமொபைல் ஹைப் ஆக மாறி வருகிறது. இதற்கு ஏற்றார் போல் ராணிப்பேட்டை-யின் இருப்பிடம் தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. தமிழ்நாட்டின் மிக இளம் மாவட்டங்களில் ஒன்று தான் ராணிப்பேட்டை 2019ல் தான் தனி மாவட்டமாக உருவானது. இது தமிழ்நாட்டின் 36வது மாவட்டமாகும்.
ராணிப்பேட்டை-யின் இருப்பிடத்தைப் பார்க்கும் போது இது காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை ஓட்டியுள்ளது, இவ்விரு தொழில்துறை மாவட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது இங்கு ரியல் எஸ்டேட் விலை மிகவும் குறைவு. இதனாலேயே பல முதலீட்டாளர்கள் ராணிப்பேட்டையைத் தேர்வு செய்கின்றனர்.
முதலீட்டை பெற ரியல் எஸ்டேட் விலை மட்டும் போதுமா..? நிச்சயமில்லை. ராணிப்பேட்டை சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலை மற்றும் புதிய சென்னை-பெங்களூரு இண்ட்ஸ்ட்ரியல் காரிடார் (CBIC) ஆகியவற்றிற்கு இடையே அமைந்துள்ளது. இதுதான் புதிய முதலீடுகளை பெற முக்கிய காரணமாக உள்ளது.
கூடுதலாக ராணிப்பேட்டை உடன் காட்பாடி மற்றும் அரக்கோணம் ரயில்வே சந்திப்புடன் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், ராணிப்பேட்டை-க்கு அருகில் இருக்கும் சென்னை-பெங்களூரு இண்ட்ஸ்ட்ரியல் காரிடார் சென்னை, எண்ணூர் மற்றும் கட்டுப்பள்ளி துறைமுகங்களுடன் நேரடியாக இணைக்கிறது. கூடுதலாக, தற்போது வரும் பாரந்தூர் விமான நிலையம் அருகில் உள்ளது. இப்படி சாலை, ரயில், விமானம் என 3 போக்குவரத்திலும் இணைக்கப்பட்டு உள்ளதால் உற்பத்தியாளர்களுக்கு ராணிப்பேட்டை வரப்பிரசாதமாக உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications