ராணிப்பேட்டை: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் செயல்பட்டு வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஆடம்பர கார் பிராண்டுதான் ஜாகுவார் லேண்ட் ரோவர்.
தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் பனப்பாக்கம் சிப்காட்டில் டாடா மோட்டார்ஸ் தன்னுடைய ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை கட்டமைத்து வருகிறது. இந்த ஆலையில் எப்போது முதல் கார்களின் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு தொடங்கும் என்ற தகவலை டாடா மோட்டார்ஸ் வெளியிட்டு இருக்கிறது. ராணிப்பேட்டையில் சுமார் 9,000 கோடி ரூபாயை முதலீடு செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகன உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது .

இந்த ஆலையில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான கார்களும் மற்றும் டாடாவின் ஆடம்பர பிராண்டான ஜாக்குவார் லேண்ட் ரோவர் ரக கார்களும் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. ராணிப்பேட்டையில் கட்டமைக்கப்பட்டு வரக்கூடிய இந்த ஆலையில் படிப்படியாக உற்பத்தி தொடங்கப்படும் என டாடா மோட்டார் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அடுத்த ஐந்து இருந்து ஏழு ஆண்டுகளுக்குள் இந்த ஆலை தன்னுடைய முழுமையான உற்பத்தி திறனை எட்டிவிடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு ஆண்டுக்கு 2,50,000 கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இந்த ஆலை இருக்கும் என டாடா மோட்டார்ஸ் கூறியிருக்கிறது. இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவன மூத்த அதிகாரிகள் எக்னாமிக் டைம்ஸ் தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் ராணிப்பேட்டை உற்பத்தி ஆலையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்யும் பணி 2026 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே தொடங்கும் என தெரிவித்திருக்கிறார்கள்.
முதல் கட்டமாக ரேஞ்ச் ரோவர் ஈவோக் மற்றும் ரேஞ்ச் ஓவர் வெலார் ஆகிய இரண்டு கார்களும் இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும். டாடா நிறுவனம் மூலம் 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் ஜாகுவார் லேண்ட் ரோவர் பிராண்ட் கார்களை உற்பத்தி செய்கிறது. இந்த காருக்கான பாகங்கள் அனைத்தையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் அதனை காராக ஒருங்கிணைத்து விற்பனைக்கு கொண்டு வருகிறது.
ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களில், ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் ஆகிய கார்களை டாடா நிறுவனம் மகாராஷ்டிராவில் இருக்கும் தங்களுடைய உற்பத்தி ஆலையில் சொந்தமாக தயாரிக்கிறது . ரேஞ்ச் ரோவர் ஈவோக் மற்றும் ரேஞ்ச் ஓவர் வெலார் ஆகிய இரண்டு கார்களையும் பாகங்களை இறக்குமதி செய்து ஒருங்கிணைக்கு விற்பனை செய்கிறது. ராணிப்பேட்டையிலும் முதல்கட்டமாக கார் பாகங்களை ஒருங்கிணைக்கும் பணிகளையே மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த பணி அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications