சென்னை: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 300 சிறிய வங்கிகளின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுப்பது, யுபிஐ பயன்பாடு உள்ளிட்ட பண பரிமாற்ற சேவைகளைப் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நிலைக்கு முக்கியமான காரணம் இந்த 300 சிறிய வங்கிகளுக்கு டிஜிட்டல் வங்கி சேவை அளிக்கும் டெக் நிறுவனமான சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட ரான்சம்வேர் சைபர்செக்யூரிட்டி தாக்குதல் ஏற்பட்டு உள்ளது தான்.
சி-எட்ஜ் நிறுவனத்தின் டிஜிட்டல் வங்கி சேவையை சார்ந்து செயல்படும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இந்த பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இதேவேளையில் மற்ற வங்கி சேவைகள் இயல்பாக செயல்பட்டு வருவதாகவும் வங்கித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்திய கூட்டுறவு யூனியன் தலைவர் திலீப் சங்கானி, குஜராத்தில் உள்ள 17 மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உட்பட இந்தியாவில் சுமார் 300 வங்கிகள் கடந்த இரண்டு-மூன்று நாட்களாக வங்கி சேவைகள் சரி வர இயக்க முடியாமல் பிரச்சினைகளைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்தார்.
"ஆர்டிஜிஎஸ் மற்றும் யுபிஐ போன்ற அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பணம் அனுப்புபவரின் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது, ஆனால் பெறுநரின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை" என்று அமரேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் சங்கானி கூறினார்.
வங்கிகள் ஜூலை 29 முதல் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சி-எட்ஜ் மென்பொருள் நிறுவன அதிகாரிகள் இதை தொழில்நுட்ப கோளாறு என்று கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். சி-எட்ஜ் நிறுவனம் இதுவரையில் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
சி-எட்ஜ் நிறுவனம் என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் கூட்டணியில் உருவான நிறுவனமாகும்.
சி-எட்ஜ் நிறுவனத்தின் கட்டமைப்பில் கடந்த இரண்டு நாட்களாக ரான்சம்வேர் சைபர்செக்யூரிட்டி தாக்குதல் ஏற்பட்டு வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளது, சைபர் செக்யூரிட்டி தாக்குதல் ஏற்பட்ட பின்பு இந்த பிரச்சினையை சரிசெய்யவும், சமாளிக்கவும், இதைவிட முக்கியமாக பெரிய அளவிலான பண பரிமாற்ற அமைப்பை பாதுகாக்க சி-எட்ஜ் தனது கட்டமைப்பை பிற சேவைகளில் இருந்து தனிமைப்படுத்தி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சி-எட்ஜ் நிறுவனத்தின் கட்டமைப்பில் ரான்சம்வேர் தாக்குதல் மூலம் எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது, ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இதுக்குறித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்பிசிஐ அமைப்பு இன்று மாலையில் வெளியிட்ட அறிக்கையில் "சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது. மேலும், சி-எட்ஜ் நிறுவனத்தை என்பிசிஐ இயக்கும் ரீடைல் பேமெண்ட் சிஸ்டம் உடனான தொடர்பை தற்காலிகமாக நீக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து NPCI, வங்கி சேவை கட்டமைப்பை ரான்சம்வேர் தாக்குதலில் இருந்து மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவசியமான பாதுகாப்பு மறு ஆய்வு நடந்து வருவதாகவும் NPCI தெரிவித்துள்ளது.
இந்த மீட்பு பணிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், சி-எட்ஜ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் வங்கி கட்டமைப்பு வியாழக்கிழமை காலை அல்லது மதியம் செயல்படத் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சி-எட்ஜ் டெக்னாலஜிஸ்-ன் ரான்சம்வேர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வங்கிகள் நாட்டின் மொத்த பேமெண்ட் அமைப்பில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளன என்று மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications