டாடா சாம்ராஜ்ஜியத்தில் முக்கிய இன்ஜினியரிங் சேவை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானதாக அறிவித்துள்ளது. சைபர் அட்டாக் கடந்த 4-5 வருடங்களில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, குறிப்பாக கொரோனா தொற்று காலாத்திற்கு பின்பு இந்திய நிறுவனங்களையும், இந்த தளங்களையும் டார்கெட் செய்து நடத்தப்படும் சைபர் அட்டாக் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஏற்கனவே சைபர் செக்யூரிட்யில் பெரிய அளவில் வலிமைப்படுத்தியிருக்கும் டாடா டெக்னாலஜிஸ் ரான்சம்வேர் தாக்குதலுக்கு உள்ளானது டெக் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக டாடா டெக்னாலஜிஸ் சில ஐடி சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தின் சேவைகள் சில மணிநேரம் பாதிக்கப்பட்டாலும், சில மணிநேரத்தில் ஒவ்வொன்றாக மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்து பெரும்பாலான சேவைகளை மீட்டெடுத்துள்ளசு. ஆயினும், இந்த சம்பவம் தற்போது இந்திய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்களுடைய நிறுவனத்தில் ரான்சம்வேர் தாக்குதல் நடந்ததுள்ளது, சில ஐடி சேவைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும், வாடிக்கையாளர் டெலிவரி சேவைகளில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்நிறுவனம் வலியுறுத்தியது.
இந்த சைபர் தாக்குதலின் மூல காரணத்தைத் ஆய்வு செய்து வருவதாகும், நிறுவனத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த உள்ளதாகவும், சைபர் செக்யூரிட்டி அதிகாரிகள் இதற்கான பணிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications