ரன்வீர் சிங், மாதவன், சாரா அர்ஜுன் ஆகியோர் நடிப்பில் வெளியாகயிருக்கும் துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துரந்தர் திரைப்படம் வெளியானது. ரன்வீர் சிங் நடிப்பில் ஸ்பை திரில்லராக வெளியான துரந்தர் திரைப்படம் ரசிகர்களின் பெரிய ஆதரவை பெற்றது.
குறிப்பாக திரையரங்குகளில் சென்று காண்பதற்கு மிகச்சிறந்த ஒரு காட்சி அனுபவத்தை தந்ததால் இந்த படம் ஹிட் ஆனது. இந்நிலையில் தான் துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் துரந்தர் தி ரிவெஞ்ச் என்ற பெயரில் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் வெளியானது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர். நான்கு மணி நேரம் காட்சிகள் கொண்ட இந்த திரைப்படம் முதல் நாளிலேயே பெரிய அளவிலான வசூலை குவித்துள்ளது. அந்த வகையில் இதுவரை வெளியான நேரடி இந்தி படங்களிலேயே முதல் நாளிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்த படம் என்ற பெருமை துரந்தர் - 2 படத்திற்கு கிடைத்துள்ளது. இந்தி மொழியில் மட்டும் இந்த படம் முதள் நாளில் 102.5 கோடி ரூபாய் வசூலை குவித்து இருக்கிறது.
ஷாருக்கானின் ஜவான் படம் முதல் நாள் திரையிடலில் 75 கோடி ரூபாயை வசூல் செய்தது, அனிமல் படம் 64 கோடி ரூபாயும் பதான் படம் 57 கோடி ரூபாயும் வசூல் செய்திருந்தன. இவற்றை எல்லாம் முந்தி தற்போது துரந்தர் படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை படைத்த முதல் இந்தி படம் என்ற பெருமை பெற்றுள்ளது.
ஒட்டு மொத்தமாக அனைத்து மொழிகளிலும் முதல் நாள் வசூல் என பார்த்தால் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் 164 கோடி ரூபாய் வசூலையும், ஆர் ஆர் ஆர் படம் 133 கோடி ரூபாய் வசூலையும் பாகுபலி 2 படம் 121 கோடி ரூபாயும் வசூலையும் குவித்திருந்தன. இந்த பட்டியலில் துரந்தர் 2 படம் இடம் பிடித்துள்ளது.
முதல்நாளில் ஒட்டு மொத்தமாக துரந்தர் படம் 145 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது. குறிப்பாக பெய்டு பிரிவியூ எனப்படும் புதன்கிழமை மாலையில் கட்டண பிரிவியூ காட்சி திரையிடலில் மட்டும் 43 கோடி ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. வெளிநாடுகளிலும் துரந்தர் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 4 மணி நேர காட்சி கொண்டிருந்தாலும் வட மாநிலங்களில் இந்த படத்திற்கு கூட்டம் குறையவில்லை. ரம்ஜான் விடுமுறை வருவதால் இந்த வீக் எண்ட் துரந்தர் வீக் எண்டாக இருக்க போகிறது.


Click it and Unblock the Notifications