ரன்வீர் சிங் நடிப்பில் வியாழக்கிழமை திரைக்கு வந்த துரந்தர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர் தி ரிவெஞ்ச் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக பாலிவுட் பட உலகில் இதுவரை இல்லாத வசூலை குவித்துள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவான துரந்தர் படம் கடந்த டிசம்பரில் வெளியானது. ஸ்பை திரில்லர் படம் என்பதால் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த படமே பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் வியாழக்கிழமை அன்று உலகம் முழுவதும் வெளிவந்தது. துரந்தர் தி ரிவெஞ்ச் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த படம் வெளியாவதற்கு முன்னரே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

புதன்கிழமை மாலை பெய்டு பிரிவியூவ் ஷோக்களே அரங்கம் நிறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வியாழன் முதல் இன்று இந்த படத்தின் காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகவே இருக்கிறது. 4 மணி நேரம் கொண்ட படம், ஏ சர்டிஃபிகேட் கொண்ட படம் என்பதால் 2ஆவது, 3ஆவது நாட்களில் வரவேற்பு குறையுமோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் துரந்தர் 2 படம் அதை எல்லாம் மிஞ்சிவிட்டது.
4 மணி நேர காட்சிகளாக இருந்தாலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி தீர்த்து வருகின்றனர். துரந்தர் தி ரிவெஞ்ச் படம் 4 மணி நேரமும் விறுவிறுப்பு குறையாமல் இருப்பதாக படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வருவதால் தியேட்டரில் கூட்டம் குறையவே இல்லை. அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடுகின்றனர்.
துரந்தர் படத்தின் முதல் பாகம் 1400 கோடி ரூபாய் வரை வசூல் செய்து வெற்றிப்படமானது. இந்நிலையில் 2ஆம் பாகமும் 1500 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் என சொல்லப்படுகிறது. இந்தத் திரைப்படம் வெளிவந்த இந்த முதல் மூன்று நாட்களிலேயே 500 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது.
இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் வெளிவந்து இந்த ஆண்டின் மிகச்சிறந்த ஒரு படமாக மாறி இருக்கிறது. இந்த திரைப்படத்தை பொறுத்தவரை சுமார் 21,000 காட்சிகள் திரையிடப்படுகின்றன. மூன்றாவது நாளில் இந்தத் திரைப்படம் ஒட்டுமொத்தமாக இந்தியா மற்றும் வெளிநாடுகள் என 501.4 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆதித்ய தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் ,மாதவன், அக்ஷய் கண்ணா ,சாரா அர்ஜுன் நடித்திருக்கும் துரந்தர் 2 படம் நேரடியாக இந்தி மொழியில் உருவாகி வெளியிடப்பட்டு முதல் மூன்று நாட்களிலேயே 500 கோடி ரூபாய் வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனை படைத்துள்ளது. இந்தத் திரைப்படம் தன்னுடைய பட்ஜெட்டை விட கூடுதலாக வருமானத்தை மூன்று நாட்களிலேயே திரும்ப பெற்றுவிட்டது என கூறலாம். திரைப்பட பட்ஜெட்டே 300 கோடி ரூபாய் தான் ஆனால் அது இதுவரை 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications