முன்னணி ரைடு ஹெய்லிங் நிறுவனமான ரேபிடோ தனது பயனர்கள் மற்றும் ஓட்டுநர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களான பெயர், முகவரி மற்றும் மொபைல் நம்பர் போன்ற தகவல்களை வெளிப்படுத்தியதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் நிறுவனம் அதை சரி செய்துள்ளதாக புதன்கிழமை அன்று தெரிவித்துள்ளது. இந்த டேட்டா மீறல்கள் நிறுவனத்தின் ஃபீட்பேக் போர்ட்டலால் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாகவே நிறுவனங்கள் தங்களுடைய சாப்ட்வேர் சார்ந்த சேவைகளுக்காக பிற நிறுவனங்களை நம்பியிருக்கும். அப்படித்தான் ரேபிடோ நிறுவனத்தின் ஃபீட்பேக் கலெக்ஷன் சிஸ்டமிற்க்கும், மூன்றாம் தரப்பு சேவை வழங்குனருக்கும் இடையிலான API ஒருங்கிணைப்பின் போது இந்த பாதுகாப்பு மீறல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பயனர்களின் முழு பெயர், முகவரி மற்றும் நம்பர் ஆகியவற்றுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

செக்யூரிட்டி பிரீச் என்றால் என்ன?: பொதுவாக ஒரு இணையதளம் அல்லது டேட்டாவை கொண்ட ஒரு தளம் அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லது நெட்வொர்க் போன்றவற்றில் அங்கீகரிக்கப்படாத அனுகல் ஏற்பட்டாலோ அல்லது டேட்டா திருட்டு ஏற்பட்டாலோ செக்யூரிட்டி பிரீச் ஏற்படுகிறது. இதை தமிழில் டேட்டா மீறல் என்று கூட சொல்லலாம். இதனால் டேட்டா தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஏற்படுவதனால் தனி நபர்கள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு கடுமையான நிதி இழப்புகள் ஏற்படும் அபாயம் உண்டு.
TechCrunch-இன் அறிக்கையின்படி, 1,800-க்கும் மேற்பட்ட ஃபீட்பேக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அதில் மொபைல் நம்பர், மெயில், பெயர் போன்ற தனிப்பட்ட தகவல்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
"எங்கள் சேவைகள் குறித்து தெரிந்து கொள்ள பயனர்களிடமிருந்து ஃபீட்பேக் பெரும் செயல்முறையில் இறங்கினோம். இது மூன்றாம் தரப்பினரால் நிர்வகிக்கப்படுகிறது. பொதுமக்களின் தனிப்பட்ட விவரங்கள் சில தவறான பயணர்களை சென்றடைந்ததை கண்டறிந்தோம். அதை உடனடியாக சரி செய்துள்ளோம். எனவே வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமாக பயனர்களின் டேட்டாவை பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம்", என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்றைய சூழலில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் தங்களின் டேட்டாவை பாதுகாப்புடன் கையாள்வது முக்கியம். அந்த வகையில் ராப்பிடோ நிறுவனம் விரைந்து செயல்பட்டு டேட்டா மீறலை சரி செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications