இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் நாம் சாப்பிட விரும்பும் உணவுகளை தேடிச் சென்று சாப்பிட வேண்டியதில்லை. இருந்த இடத்தில் இருந்தே ஃபோனில் ஆர்டர் செய்தால் போதும். அது உங்களை தேடி வந்து விடும். அந்த வகையில், தற்போது பிரபலமாக இருக்கும் உணவு டெலிவரி நிறுவனங்கள் என்றால், அது ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ தான். உணவை ஆர்டர் செய்யலாம் என்றாலே, அனைவருக்கும் முதலில் நினைவு வருவது இந்த இரண்டு செயலிகளும் தான். அந்த அளவிற்கு உணவு துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ.
ஆனால், தற்போது அதை முறியடிக்க ரேபிடோ நிறுவனம் களமிறங்கியுள்ளது. டாக்ஸி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது போல், உணவு டெலிவரி துறையிலும் புதிய புரட்சியை ஏற்படுத்த ரேபிடோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்விக்கி மற்றும் சொமாட்டோவை அதிக கமிஷன் வசூலிக்கும் நிலையில், ரேபிடோ பூஜ்ஜிய கமிஷனில் உணவுகளை டெலிவரி செய்ய தயாராகி வருகிறது. இந்த முயற்சி சிறு உணவங்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது சொமாட்டோ நிறுவனம் ஒவ்வொரு நாளும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான உணவு விநியோகங்களை நிறைவு செய்து வருகிறது. அதேபோல், ஸ்விக்கி ஒவ்வொரு நாளும் 2 மில்லியனுக்கும் அதிகமான உணவு விநியோகங்களை செய்கிறது. இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து உணவு விநியோகத் துறையில் 95% சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. இது $8 பில்லியனுக்கும் அதிகமான அளவு கொண்டது.
அண்மை காலமாகவே ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ நிறுவனங்கள் அதிக கமிஷன் பெறுவதால், அதில் இருந்து சிறு உணவகங்கள் வெளியேறி வருகிறது. இதனால், இந்த இரண்டு நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளன. இந்த சூழலில் தான், ரேபிடோவின் முடிவு ஸ்விக்கி மற்றும் சொமாட்டோவுக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. முதன்முதலில் உணவு டெலிவரி சேவையை ரேபிடோ நிறுவனம் பெங்களூருவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் கிடைக்கும் வெற்றியை பொறுத்து சென்னை, கோவை உள்ளிட்ட மற்ற நகரங்களில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்முதலில் ரேபிடோவின் பைக் டாக்ஸியும் கடந்த 2015ஆம் ஆண்டு பெங்களூருவில் தான் தொடங்கப்பட்டது. பின்னர் தான், சென்னை, ஹைதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு சென்றடைந்தது. அதே முறையைத்தான் தற்போது உணவு டெலிவரி சேவையிலும் பின் தொடர உள்ளது. ஸ்விக்கி மற்றும் சொமாட்டோ நிறுவனங்கள் ஃபுட் டெலிவரிக்கு 16 முதல் 30% வரை கமிஷன் வசூலிக்கிறார்கள். ஆனால், உணவு விநியோகத்தில் பூஜ்ஜிய கமிஷன்கள் மூலம் அதைச் செய்ய ரேபிடோ திட்டமிட்டுள்ளது.
மேலும் ரூ.100க்கு மேல் உள்ள அனைத்து உணவு ஆர்டர்களுக்கும் ரேபிடோ ரூ.25 டெலிவரி கட்டணமாக வசூலிக்கும். ரூ.100 மற்றும் அதற்குக் குறைவான அனைத்து உணவு ஆர்டர்களுக்கும் ரூ.20 நிலையான கட்டணம் வசூலிக்கும். இதன் மூலம் ரேபிடோ செயலியில் பைக், ஆட்டோ, டாக்ஸி புக் செய்வது போல் உணவையும் ஆர்டர் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆன்லைன் விலைகள் ஆஃப்லைன் விலைகளுக்கு இணையாக இருப்பதை உறுதி செய்தல், நேர்மையான விலை நிர்ணயம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக ரேபிடோ தெரிவித்துள்ளது. ரேபிடோவின் இந்த புதிய முயற்சி உணவு விநியோக சந்தையில் கடும் போட்டியை உருவாக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications