ஆடை பிராண்டில் முதலீடு செய்த Zerodha நிகில் காமத்..!

இந்தியாவின் பிரபல direct-to-consumer (D2C) ஃபேஷன் ரீடெய்லர் நிறுவனமான ரேர் ரேபிட் (Rare Rabbit)150 கோடி ரூபாய் முதலீட்டினை திரட்டி உள்ளது. ரேர் ரேபிட் என்பது ஃபேஷன் ஆடைகளை விற்பனை செய்து வரக்கூடிய ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அண்மையில் 500 கோடி நிதி திரட்டுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. முதல் கட்டமாக 150 கோடி ரூபாய் நிதி திரட்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிகில் காமத்தின் முதலீட்டு நிறுவனமான க்ரூஹாஸ், மும்பையை அடிப்படையாகக் கொண்ட A91 பார்ட்னர்ஸ் மற்றும் வேதாந்த் ஃபேஷன் நிறுவனத்தின் தலைவர் ரவி மோடி ஆகியோர் கூட்டாக இந்த நிறுவனத்தில் 150 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

ஆடை பிராண்டில் முதலீடு செய்த Zerodha நிகில் காமத்..!

முதல் கட்டமாக 150 கோடி ரூபாய் திரட்டப்பட்டுள்ள நிலையில் இதன் நிறுவனர்கள் அக்சிகா பாடர் மற்றும் மனிஷ் பாடர் ஆகியோர் தங்கள் வசம் இருக்கக்கூடிய பங்குகளை விற்பனை செய்து அதன் மூலம் சுமார் 250 கோடி ரூபாயை திரட்ட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராதாமணி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பிராண்டு தான் ரேர் ரேபிட். ஆண்களுக்கான இந்த ஆடை விற்பனை நிறுவனம் 2022-23 ஆம் நிதி ஆண்டில் 381 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது. இதில் 32.2 கோடி லாபமாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த நிறுவனத்தின் லாபம் 84 சதவீதம் என உயர்ந்துள்ளது.

தற்போதைய சூழலில் ரேர் ரேபிட் நிறுவனத்தில் A91 நிறுவனம் மூலதனத்தில் 9.65 சதவீத பங்குகளையும், என்கேஸ்கொயர் நிறுவனம் 4.13 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன.

அதேபோல மன்யவார் பிராண்டின் நிறுவனர் ரவி மோடியின் குடும்பத்தினர் இதில் 2.13 சதவீத பங்குகளையும், அவரது மகன் வேதாந்த் மோடி 0.43 சதவீத பங்குகளையும் வைத்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரேர் ரேபிட் நிறுவனம் ஆண்களுக்கான ஷர்ட்டுகள், ட்ரவுசர்கள், ஜாக்கெட் மற்றும் ஷூ போன்றவற்றை விற்பனை செய்து வருகிறது.

ராதாமணி டெக்ஸ்டைல்ஸின் தலைவர் மனிஷ் பாடர் மற்றும் அவரது மனைவி அக்சிகா பாடர் ஆகிய இருவரும் 2015 ஆம் ஆண்டு தி ஹவுஸ் ஆஃப் ரேர் என்ற பெயரின் கீழ் ரேர் ரேபிட் என்ற பிராண்டினை தொடங்கினர்.

மேட் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே இவர்கள் ஆடைகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்தியாவில் தற்போது 100க்கும் அதிகமான ரீடெய்ல் கடைகளை இந்த நிறுவனம் வைத்து இருக்கிறது. ஈ காமர்ஸ் தளங்களிலும் இந்த பிராண்டின் ஆடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+