சினிமா பிரபலங்கள் அடுத்தடுத்துத் தாங்கள் உச்சத்தில் இருக்கும் போதே சரியா இடத்தில், சரியான முறையில் பணத்தை முதலீடு செய்து எதிர்காலத்தைப் பாதுகாப்புச் செய்துகொள்ளும் பணிகளை அதிகமானோர் செய்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு பேஷன் கிரிக்கெட் துறையில் இருந்தது, சச்சின் முதல் தோனி வரையில் பலர் பல இடத்தில் முதலீடு செய்துள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது புஷ்பா, விஜய் நடித்துக்கொண்டு இருக்கு வாரிசு ஆகிய திரைப்படத்தின் ஹீரோயினான ரஷ்மிகா மந்தனா அழகு சாதன பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
ரஷ்மிகா மந்தனா
நடிகை ரஷ்மிகா மந்தனா வியாழக்கிழமை (ஜூன் 23) வீகன் (Vegan) அழகு மற்றும் பர்சனல் கேர் பிராண்டான ப்ளம் (Plum) முதலீடு செய்துள்ளார். இந்த முதலீட்டின் மூலம் புஷ்பா பட நடிகை ப்ளம் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ப்ளம் நிறுவனம்
மேலும் ரஷ்மிகா மந்தனா ப்ளம் நிறுவனத்தில் செய்த முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வழங்கப்பட்ட பங்கு போன்ற முதலீட்டின் விவரங்களை இந்நிறுவனம் வெளியிடவில்லை. மந்தனாவுடனான கூட்டணி மூலம் புதிய வாடிக்கையாளர்களைக் கையகப்படுத்துவதற்கான புதிய பாதைகளை உருவாக்க உதவும் என்று ப்ளம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இசட் மற்றும் மில்லினியல் தலைமுறை
ப்ளம் நிறுவனம் தனது பிராண்ட் இசட் மற்றும் மில்லினியல் தலைமுறையினரைக் குறிவைத்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதேபோல் ரஷ்மிகா மந்தனா உடனான கூட்டணியும் விளம்பரமும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என ப்ளம் நிறுவனம் அதிகளவில் நம்புகிறது.
50 மில்லியன் டாலர்
ப்ளம் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு முதல் முறையாக நிதி திரட்டியது. இதுவரை ப்ளம் நிறுவனம் பல்வேறு நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 50 மில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி திரட்டியுள்ளது. சமீபத்தில் மார்ச் 2022 இல் A91 பார்ட்னர்ஸ் தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் சுமார் 35 மில்லியன் டாலர் அளவிலான தொகையைத் திரட்டியது.
சங்கர் பிரசாத்
பிளம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் சங்கர் பிரசாத் கூறுகையில், முதல் நிதிச் சுற்றில் இருந்து, பிராண்ட் கிட்டத்தட்ட 15 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. வாடிக்கையாளர்களுடன் தனது பிராண்டின் தொடர்பை வலுப்படுத்த நிறுவனம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், ராஷ்மிகாவை இணைத்துக் கொள்வதில் பிராண்ட் மகிழ்ச்சி அடைவதாக அவர் குறிப்பிட்டார்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications