ரத்தன் டாடா-வுக்கு 85-வது பிறந்த நாள்.. மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் தொழிலதிபர்.. ஏன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மீது யாரேனும் கற்களை வீசினால் அதனை கொண்டு கட்டிடம் எழுப்புங்கள் என்ற வரிகளுக்கு சொந்தமான ரத்தன் டாடாவுக்கு இன்று பிறந்த நாள். இந்தியாவிலேயே இன்று மிகப்பெரிய தொழிலதிபதிராக வலம் வந்து கொண்டு இருக்கும் டாடாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை கூறிக் கொள்வோம்.

உணவில் பயன்படுத்தப்படும் உப்பு முதல் கொண்டு ஜொலிக்கும் வைரம் வரையில் உள்ள அனைத்து வணிகத்திலும் வெற்றிகரமாக கோலேச்சி வரும் டாடா, வணிகத்தில் மட்டும் அல்ல, கொடையளிப்பதிலும் மாமனிதன்.

டாடா குழுமத்தின் அதிரடி முடிவு.. முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்..! டாடா குழுமத்தின் அதிரடி முடிவு.. முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் சர்பிரைஸ்..!

டாடாவின் குடும்பம்

டாடாவின் குடும்பம்

ரத்தன் டாடா டிசம்பர் 28, 1937ம் ஆண்டு குஜராத்தின் சூரத்தில் பிறந்தார். இவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக வணிகம் செய்து வந்திருந்தாலும், தன்னுடைய தனித் திறனால் வெற்றிக் கனியை ருசித்தவர்.

சூரத்தில் நாவல் டாடா, சுனி தம்பதியருக்கு மகனாக பிறந்த ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் ஜாம்செட்ஜி டாடா, ரத்தன் டாடாவின் தாத்தா ஆவார். 1948ல் அவரது பெற்றோர் பிரிந்த பிறகு, ரத்தன் டாடா 10 வயதில் இருந்து டாடா பேலஸில் அவரது பாட்டி லேடி நவாஜ்பாய் என்பவரால் வளர்க்கப்பட்டார்.

கல்வி

கல்வி

8ம் வகுப்பு வரையில் மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியில் படித்தார். தொடர்ந்து கதீட்ரல் மற்றும் ஜாஜ் கானான் பள்ளி, மும்பை மற்றும் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளி மற்றும் 1955ல் நியூயார்க் நகரத்தில் உள்ள ரிவர்டேல் கண்ட்ரி பள்ளியில் பட்டம் பெற்றார். 1959ம் ஆண்டு கட்டிட கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் படிப்பதற்காக கார்னெல் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அதன் பின்னர் 1975ல் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை படிப்பினை தொடர்ந்தார்.

வேலை

வேலை

1962ன் பிற்பகுதியில் இந்தியாவுக்கு திரும்புவதற்கு முன்பு, அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் ஜோன்ஸ் மற்றும் எம்மன்ஸுடன் சிறிது காலம் பணியாற்றினார். எனினும் 1962ன் பிற்பாதியில் டாடா குழுமத்தில் இணைந்தார். இந்தியா திரும்பிய கையோடு டாடா ஸ்டீல் பிரிவில் இணைந்து பணியாற்றவும் தொடங்கினார்.

டாடாவின் தலைவர்

டாடாவின் தலைவர்

ஆரம்பத்தில் ப்ளூகாலர் தொழிலாளியாக தனது பணியினை தொடங்கிய டாடா, 1971ல் நேஷனல் ரேடியோ & எல்க்ட் ரானிக்ஸ் நிறுவனத்தின் பொறுப்பு இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு தனது உழைப்பால் 1981ல் டாடா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராக முன்னேறினார்.இந்த காலகட்டத்தில் டாடா டீ நிறுவனம் டெட்லி-யையும், டாடா மோட்டார்ஸ் சொகுசு காரான ஜாகுவார் லேண்ட் ரோவரரையும், டாடா ஸ்டீல் கோரஸையும் வாங்கியது நினைவுகூறத்தக்கது.

கொடைவள்ளல்

கொடைவள்ளல்

இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு முன்னோடியாக இருந்து வரும் ரத்தன் டாடா, தொழில் நுணுக்கங்களையும் இளைஞர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். இவரின் கொடைத்திறனை சொல்லி மாளாது. ஏழை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என பல லட்சம் பேருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலமாக இன்றளவிலும் பல உதவிகளை செய்து வருகின்றார். கொரோனா காலத்தில் கூட பல கோடிகளை வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தொழிலதிபர் டூ காதல்

தொழிலதிபர் டூ காதல்

சர்வதேச அளவில் ஒரு சிறந்த தொழிலதிபராக வலம் வரும் ரத்தன் டாடாவும் காதலில் விழுந்தவர். இதனை அவரே மும்பையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார். தனது சொந்த வாழ்க்கையில் தோல்வியுற்ற டாடா, அதனை எண்ணி கலங்காமல், அவரது தொலை நோக்கு பார்வையால் தனது வியாபாரத்தில் கவனம் செலுத்தியவர். அதன் மூலம் வெற்றி மகுடம் சூடியுள்ளார். இன்று பல ஆயிரம் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக இருந்து வரும் டாடாவின் பிறந்த தினம் இன்று.

சுவாரஸ்ய நிகழ்வுகள்

சுவாரஸ்ய நிகழ்வுகள்


ரத்தன் டாடாவுக்கு விமானம் ஓட்டுவதில் மிக ஆர்வம் உண்டு. 2007ம் ஆண்டு f-16 ஃபால்கன் நிறுவனத்தினை இயக்கிய முதல் இந்தியராவார்.

 

2009ல் ரத்தன் டாடா ஒரு லட்சம் ரூபாயில் ஒரு காரினை தயாரிப்பதாக உறுதியளித்தர். அதன் பின்னர் தான் டாடாவின் நானோ கார் அறிமுகமானது.

ரத்தன் டாடா மிகப்பெரிய கார் பிரியர். அவரது கலெக்ஷனில் மெர்சிடிஸ் பென்ஸ், எஸ் கிளாஸ், மசெராட்டி குவாற்றோபோர்ட், மெர்சிடிஸ் பென்ஸ் 500 எஸ் எல், ஜாகுவார் எஃப் டைப் உள்ளிட்ட பலவும் அடங்கும்.

2010ம் ஆண்டு ஹார்வார்ட் பிசினஸ் ஸ்கூலுக்கு 50 மில்லியன் டாலரினை நன் கொடையாக வழங்கினார். இது டாடா ஹால் என்று அழைக்கப்படும் மையத்தினை உருவாக்கப் பயன்பட்டது.

டாடா இந்தியாவின் மிக உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விபூஷன் (2008), பத்ம பூஷன் (2000) உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.

ரியலி ஹேட்ஸ் ஆப் யூ சார்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ratan Tata 84th birthday: ratan tata interesting facts in tamil

Ratan Tata 84th birthday: ratan tata interesting facts in tamil/ரத்தன் டாடா-வுக்கு 84-வது பிறந்த நாள்.. சாமனிய மக்களால் கொண்டாடப்படும் மாபெரும் தொழிலதிபர்.. ஏன்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X