டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான உடல்நிலை காரணமாக இன்று மாலை அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, இரண்டு நபர்கள் கூறியதாக எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளன.
86 வயதான தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வயது மற்றும் தொடர்புடைய மருத்துவ நிலைமைகளின் காரணமாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போதும் தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது, ஆனால் இதை ரத்தன் டாடாவே தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்திருந்தார்.
புதன்கிழமை அவரது நிலை குறித்த அப்டேட்கள் குறித்து டாடா குழுத்திடம் கேள்வி கேட்டப்போதும், டாடாவின் பிரதிநிதி உடனடியாக பதிலளிக்கவில்லை. திங்களன்று ரத்தன் டாடா வெளியிட்ட தனது பதிவில் தான் நல்ல மனநிலையில் இருப்பதாகவும், மக்களும் நல விரும்பிகளும் கவலைப்பட எந்த காரணமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்திய தொழில் உலகின் முன்னோடியாகத் திகழும் ரத்தன் டாடா, தனது 86 வயதிலும் தொழில்துறையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். டாடா குழுமத்தை உலகளாவிய அளவில் அடையாளம் காட்டியவர் ரத்தன் டாடா, இவர் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் செய்யும் முதலீடுகள் தான் தற்போது அதிகம் பேசப்படும் செய்தி.
டாடா குழுமத்தின் சரித்திரம்: 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகவும், 2016 அக்டோபர் முதல் 2017 பிப்ரவரி வரை இடைக்கால தலைவராகவும் பணியாற்றிய ரத்தன் டாடா, தற்போது தொண்டு நிதி நிறுவனங்களைத் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். டாடா குழுமத்தை உலகளாவிய அளவில் ஒரு முன்னணி தொழில் நிறுவனமாக மாற்றிய பெருமை இவருக்கு உண்டு.
ஸ்டார்ட்அப் துறையில் ரத்தன் டாடா: தனது 86 வயதிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதில் தீவிரமாக உள்ளார். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். பெரும்பாலான முதலீட்டை தனிப்பட்ட முறையில் நிர்வாகம் செய்யும் முதலீட்டு நிறுவனம் மூலம் முதலீடு செய்து வருகிறார். இவருடைய முதலீட்டுக்கும் டாடா குழுமத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரங்கள்: இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் (2008) மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் (2000) ஆகியவற்றை பெற்றவர் ரத்தன் டாடா.
ஏன் ஸ்டார்ட்அப்ஸ்?: ரத்தன் டாடா ஏன் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடு செய்கிறார் என்ற கேள்வி பலருக்கு எழலாம். இதற்கு பதில், இவர் இந்தியாவின் இளைஞர்களின் திறமை மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறார். புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஐடியாக்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க விரும்புகிறார்.
ரத்தன் டாடா ஒரு தொழிலதிபரைத் தாண்டி, ஒரு தொலைநோக்குடன் கூடிய தலைவர். தனது 86 வயதிலும் தொழில் உலகில் புதிய ஸ்டார்ட்அப் நிறுவனக்களை ஊக்குவித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications