இந்திய தொழில்துறை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ள ரத்தன் டாடாவின் மறைவு, பலருக்கு தனிப்பட்ட இழப்பாக உணர்ந்தனர். இளைஞர் தொழில்முனைவோர் முதல் மூத்த நடிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் வரை பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் ரத்தன் டாடாவுக்கு இறுதி மரியாதை செலுத்த வந்திருந்தனர்.
இன்த நிலையில் 'Kaun Banega Crorepati' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது அமிதாப் பச்சன், ரத்தன் டாடா தன்னிடம் பணத்தை கேட்ட சுவாரஸ்யமான நிகழ்வைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது நாடு முழுவதும் டிரெண்டாகி வருகிறது.

மாதவன், பாரா கான் மற்றும் போமன் இரானி ஆகியோர் கலந்து கொண்ட கேபிசி நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், தான் லண்டனுக்கு சென்ற விமானத்தில் ரத்தன் டாடா-வை சந்தித்த அரிய தருணத்தைப் பகிர்ந்து கொண்டார்.
சோனி டிவி தனது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோவில், அமிதாப் பச்சன், ரத்தன் டாடாவுடன் லண்டனுக்கு விமானத்தில் சென்றதாகவும், இருவரும் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் இறங்கிய பிறகு, ரத்தன் டாடா தனது ஊழியர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.
பின்னர், அவர் விமான நிலையத்தில் இருந்த போன் பூத்தில் அவர்களை அழைக்க முயற்சி செய்த போது அவரிடம் பணம் இல்லை.
சிறிது நேரம் கழித்து, அவர் திரும்பி என்னிடம், "அமிதாப், நான் உங்களிடமிருந்து சிறிது பணம் கடன் வாங்கலாமா? என்னிடம் போன் கால் செய்ய பணம் இல்லை" என்று கேட்டார் என்று அமிதாப் பச்சன் இந்நிகழ்ச்சியில் கூறினார்.
அமிதாப் பச்சன், ரத்தன் டாடா-வின் இந்த வேண்டுகோள்-ஐ கண்டு வியந்தாகவும், உடனே தன்னிடம் இருந்த பணத்தை எடுத்து கொடுத்ததாகவும் கூறினார். மேலும் ரத்தன் டாடாவின் எளிய குணத்தை பாராட்டியும் இந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார் அமிதாப் பச்சன்.
அமிதாப் பச்சன் டிவிட்டரில் ஆக்டிவ் ஆக இருக்கும் நபர், இந்த சுவார்ஸ்ய தருணத்தை அவர் டிவிட்டர் பதிவு வாயிலாகவே தெரிவித்திருக்கலாம். ஆனால் ரத்தன் டாடாவின் எளிய குணத்தை பல கோடி மக்களுக்கு தானே கூற வேண்டும் என்பதற்காக ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு சரியான நேரம் பார்த்து Kaun Banega Crorepati நிகழ்ச்சியில் இதை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications