ரத்தன் டாடா உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இந்திய பில்லியனர்களில் ஒருவர். 3800 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிகர மதிப்புடன், ரத்தன் டாடா தனது அறக்கொடைகள், வணிகத் திறன், புத்திசாலித்தனத்துக்கு பெயர் பெற்றவர்.
ரத்தன் டாடா மற்றும் அவரது குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை முழுவதும் ஊடக வெளிச்சத்தில் இருந்தாலும், ரத்தன் டாடாவின் இளைய சகோதரர் ஜிம்மி நேவல் டாடாவைப் பற்றி பலருக்குத் தெரியாது.

ஜிம்மி நேவல் டாடா: எளிமையான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்ற ஜிம்மி டாடா, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் எமரிட்டஸ் ரத்தன் டாடாவின் இளைய சகோதரர் ஆவார். அவரது சகோதரரைப் போலல்லாமல், ஜிம்மி டாடா கூச்ச சுபாவமுள்ளவர். பொதுமக்கள் மற்றும் மீடியா வெளிச்சத்தை விரும்பாதவர் ஜிம்மி நேவல் டாடா.
இன்ஸ்டா பதிவு: ரத்தன் டாடா மற்றும் அவரது சகோதரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தனது சகோதரர் ஜிம்மி டாடாவுடன் இருக்கும் கருப்பு-வெள்ளை புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்பு, ஜிம்மி நேவல் டாடா யார்? அப்போது என்ன செய்கிறார் என்பது போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்தது.
அன்பு: 1945 ஆம் ஆண்டு இரு சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோவை ரத்தன் டாடா பகிர்ந்த போது, எங்களின் அன்புக்கு மத்தியில் யாருமில்லை என பதிவிட்டு இருந்தார்.
அவரது மூத்த சகோதரர் ரத்தன் டாடா குடும்பத் தொழிலை வெற்றிகரமாக வழிநடத்தினார், ஜிம்மி டாடா வர்த்தகத்தில் விருப்பம் இல்லாமல் ஒரு படி பின்வாங்கி எளிய வாழ்க்கையை நடத்த முடிவு செய்தார்.
எளிய வாழ்க்கை: அவருக்கு பெரும் செல்வம் இருந்தபோதிலும், ஜிம்மி மும்பையின் கொலாபா பகுதியில் ஒரு எளிய 2BHK குடியிருப்பில் வசிக்கிறார், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கிறார்.
குடும்ப வியாபாரம்: ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்த பழைய இடுகையின்படி, ஜிம்மி டாடா ஒரு சிறிய குடியிருப்பில் தங்கியிருக்கிறார், குடும்ப வியாபாரத்தில் சிறிதும் ஆர்வம் காட்டவில்லை. மேலும், அவர் ஒரு சிறந்த ஸ்குவாஷ் வீரர் ஆவார். அவர் ஒவ்வொரு முறையும் கோயங்காவை வீழ்த்தினார்.
ஜிம்மி டாடா-வின் வாழ்க்கை: ஜிம்மி டாடாவிடம் மொபைல் போன் இல்லை. செய்தித்தாள் மூலம் உலக நடப்புகளை தெரிந்துக்கொள்கிறார். இருப்பினும், அவர் இன்னும் டாடா சன்ஸ், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டாடா பவர், இந்தியன் ஹோட்டல்கள் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ஆகியவற்றில் முக்கிய பங்குதாரராக உள்ளார். மேலும் டாடா வணிகத்தின் அனைத்து முன்னேற்றங்கள் குறித்தும் அப்டேட்டாக இருக்கிறார்.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications