இந்திய வர்த்தகத் துறையில் தனக்கென ஒரு பாதை, தனக்கென ஒரு நிர்வாக முறை, நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அதேவேளையில் வர்த்தகத்தையும் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைக்க முடியும் எனச் சூப்பர் பார்மூலா-வை உருவாக்கியவர் ரத்தன் டாடா. இந்திய தொழிற்துறையில் மட்டும் அல்லாமல் மக்கள் மத்தியிலும் அதிகம் மதிக்கக் கூடிய ஒரு நிறுவனத் தலைவர் என்றால் அது ரத்தன் டாடா மட்டுமே.
ரத்தன் டாடா சமுக வலைத்தளத்தில் ஆக்டிவ் ஆக இல்லை என்றாலும் இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டரில் இருக்கிறார், அவ்வப்போது ரத்தன் டாடா செய்யும் பதிவுகள் பல லட்சம் மக்களைக் கவர்ந்து வரும் வேளையில்.. இப்போது அவர் செய்த பதிவு பல கோடி மக்களின் பணத்தைக் காப்பாற்றியுள்ளது என்பதால் மிகையில்லை.

டாடா குரூப்-ன் சேர்மன் ரத்தன் டாடா, சமுக வலைத்தளத்தில் போலியாகச் சுற்றி வரும் ஒரு முதலீட்டு மோசடி வலை குறித்த பதிவில் தன்னுடைய பெயர் மற்றும் புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும், இதை யாரும் நம்ப வேண்டாம் என்று தன்னைப் பாலோ செய்யும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரத்தன் டாடா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் சோனா அவர்வால் என்ற கணக்கில் இருந்து ரத்தன் டாடா-வின் பழைய இண்டர்வியூ வீடியோ-வை வைத்து போலியான முதலீட்டு டிப்ஸ் கொடுப்பது போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது.
சோனா அவர்வால்-ன் பதிவு-க்குக் கீழ் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு ரத்தன் டாடாவின் பரிந்துரை, உங்க முதலீட்டை இன்றே பல மடங்கு உயர்த்த வாய்ப்பு இதுவாகும், ஆபத்து இல்லாத, 100 சதவீதம் உத்தரவாதம் கொண்டது. இப்போதே இந்தச் சேனலுக்குச் செல்லுங்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு deepfake விவகாரம் குறித்துக் கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், இந்திய மக்களின் சேமிப்பைப் போலி முதலீட்டு வாயிலாகக் காவு வாங்கும் நிலையில் இந்த நடவடிக்கையை வேகப்படுத்தும்.


Click it and Unblock the Notifications