டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, உலகின் பணக்கார தொழிலதிபர்களில் ஒருவர் என்பதைத் தாண்டி பல கோடி இளம் இந்திய தொழிலதிபர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக விளங்குகிறார். சமுகவலைத்தளத்தில் ரத்தன் டாடா செய்யும் ஒவ்வொரு பதிவுக்கும் லைக், கமெண்ட் குவிந்து வருகிறது.
ரத்தன் டாடா டாடா குழுமத்தின் தலைமை பொறுப்பு ஏற்கும் வரையில் இந்தியா இவரைப் போன்ற நவீன தொழிலதிபர்களைக் கண்டது இல்லை என்பது தான் உண்மை. 2022 ஆம் ஆண்டில் இவரது சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
2019 வரை மிகவும் அரிதான புயிக் ஸ்கைலார்க் எனும் காரை பத்திரமாக வைத்திருந்தார் ரத்தன் டாடா, அதன் பின்னர் அதனை அவர் விற்றுவிட்டார். அந்த வகையில் ரத்தன் டாடா வைத்திருக்கும் விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
ஃபெராரி கலிஃபோர்னியா
ரத்தன் டாடா சிவப்பு நிற ஃபெராரி கலிஃபோர்னியா காரை வைத்திருக்கிறார். ஹார்டு டாப் கன்வெர்டபில் மாடலாக ஃபெராரி கலிஃபோர்னியா கார் 4.3 லிட்டர் V8 என்ஜின் கொண்டுள்ளது. இந்த என்ஜின் 552 ஹெச்பி திறன், 504 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. இந்த மாடல் இந்தியாவில் விற்பனை செய்வதை நிறுத்தப்பட்டு உள்ளது.
டசால்ட் ஃபால்கன் பிரைவேட் ஜெட்
ரத்தன் டாடா டசால்ட் ஃபால்கன் 2000 என்னும் பிரைவேட் ஜெட் வைத்திருக்கிறார். சொந்தமாகத் தனது விமானத்தை இயக்கும் உரிமம் பெற்றவர் ரத்தன் டாடா. காம்பேக்ட் பீஸ்ட் என்று அறியப்படும் ஃபால்கன் 2000 மாடலில் டுவின் என்ஜின் செட்டப் உள்ளது. இந்தப் பிரைவேட் ஜெட் பிரென்ச் பொறியாளர்கள் அடங்கிய வல்லுனர் குழுவால் டிசைன் செய்யப்பட்டுது ஆகும்.
சீ வியூ கொண்ட மும்பை வீடு
ரத்தன் டாடாவின் கொலாபா வீட்டில் இருந்தபடி அரேபிய கடலின் மிக அழகிய தோற்றத்தை வீட்டில் இருந்து கொண்டே கண்டுகளிக்க முடியும். சுமார் 15 ஆயிரம் சது அடி பரப்பளவில் கட்டப்பட்டு இருக்கும் வீட்டில் ஏழு தளங்கள் உள்ளன. இந்த வீட்டின் மொட்டை மாடியில் இன்ஃபினிட்டி பூல் என அழைக்கப்படும் அதிநவீன நீச்சல் குளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் கார் பார்கிங் வசதி, மீடியா அறை, சன் டெக், லவுஞ்ச், மற்றொரு நீச்சல் குளம் உள்ளது. மும்பை நகரின் விலை உயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று ஆகும்.
மசிராட்டி குவாட்ரோபோர்ட்
ரத்தன் டாடா கராஜை அலங்கரிக்கும் கார்களில் மசிராட்டி குவாட்ரோபோர்ட்-ம் ஒன்று. ஆட்டோமொபைல் பிரியர்களின் கனவு வாகனமாக இருக்கும் மசிராட்டி குவாட்ரோபோர்ட் டுவின் டர்போ V6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 424 ஹெச்பி பவர், 580 டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும்.
லேண்ட் ரோவர் ஃபிரீலேண்டர்
லேண்ட் ரோவர் நிறுவனத்தை விலைக்கு வாங்கும் முன்பே ரத்தன் டாடா லேண்ட் ரோவர் ஃபிரீலேண்டர் காரை வாங்கிவிட்டார். இந்தக் காரில் சக்திவாய்ந்த நான்கு சிலிண்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 187 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications