உலக அளவில் ரத்தன் டாடா மிகப் பெரிய தொழில் அதிபராகக் கருதப்படுகிறார். சோசியல் மீடியாவில் அவருக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. டாடா குரூப்பின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா அவரது புத்திசாலித்தனத்துக்காக பாராட்டுக்குரியவர். பல புதிய தலைவர்களை உருவாக்கும் தன்மை படைத்தவர்.
கொலம்பியா பிசினஸ் ஸ்கூலுக்கு அளித்த பேட்டியில் ஒரு பிரச்னையில் சர்ச்சைக்குரிய முடிவெடுத்தது பற்றி தான் வருத்தப்பட்டதில்லை என்று ரத்தன் டாடா கூறியுள்ளார். டாடா குரூப் தலைவராக இருந்தபோது தனது அனுபவத்தை இதில் பகிர்ந்துள்ளார். ஒரு சமயம் கூலிப்படை மிரட்டலுக்கு ஆளானார்.

ஒரு பெரிய கான்ட்ராக்ட்டைத் தராவிட்டால் தன்னை கொல்லப்போவதாக ரத்தன் டாடாவுக்கு மிரட்டல் வந்துள்ளது. டாடா மோட்டார்ஸின் பெரிய யூனியனான டெல்கோவின் சொத்துக்களை அந்த கூலிப்படை அபகரிக்கவும் முயன்றது.
அந்த கூலிப்படைக்கு ஏராளமான ஆதரவாளர்கள் யூனியனில் இருந்தனர். அவர்கள் கலவரத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். கூலிப்படைத் தலைவனை சமாதானப்படுத்துமாறு ரத்தன் டாடாவுக்கு சிலர் அறிவுரை கூறினர். ஆனால் அதற்கு மாறாக கூலிப்படைத் தலைவனை எதிர்கொள்ள டாடா முடிவு செய்தார்.
போலீஸாரால் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. டாடா மோட்டார் தொழிற்சாலையில் வேலை பார்த்த ஒருவரை கூலிப்படையினர் தாக்கினர். டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் சிலரையும் கத்தியால் குத்தி தாக்கினர். இதன் மூலம் ரத்தன் டாடா-வை மிரட்டப் பார்த்தனர்.
ஆனால் இதற்கெல்லாம் டாடா அசைந்து கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஒரு வேலை நிறுத்தத்தை கூலிப்படைத் தலைவன் அறிவித்தான். இதனால் ஊழியர்கள் பணிக்கு வர மறுத்தனர். இதனால் தொழிற்சாலைக்குள் சில நாட்கள் தங்கியிருந்து ஊழியர்களுக்கு தெம்பூட்டினார் டாடா.
வேறு வழியில்லாமல் கூலிப்படைத் தலைவன் தோல்வியை ஒப்புக் கொண்டு விலகினான். அவன் கைது செய்யப்பட்டான். மிகப் பெரிய தொழில் அதிபராக இருந்தபோதும் ரத்தன் டாடாவுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டது.
இருப்பினும் அவர் மனதைரியத்தோடு உறுதியாக இருந்து நிலைமையை சமாளித்தார். சிறையிலிருந்து விடுதலையான பின்னர் டாடாவை கொல்வதற்கான கான்ட்ராக்டை பெற்றான்.
இந்தச் சமயத்திலும் அவனுடன் சமரசமாகப் போகுமாறு டாடாவுக்கு அறிவுரை தரப்பட்டது. ஆனால் அதற்கும் டாடா மசியவில்லை. இந்த நேரத்தில் தான் டாடா மோட்டார்ஸ் யூனியன் தேர்தல் வந்தது. அதில் டாடா வென்றார். எந்தச் சமயத்திலும் கூலிப்படைகளுக்கு மடிந்துபோகக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.


Click it and Unblock the Notifications