இந்தியாவின் மிகப்பெரிய தொழில் குடும்பங்களில் ஒன்றான டாடா குடும்பம் பல தலைமுறைகளாக இந்தியப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. டாடா சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சிக்கு 3 முக்கியமான தலைவர்கள் காரணம் ஒன்று, ஜாம்ஷெட்ஜி டாடா, ஜேஆர்டி டாடா கடைசியாக ரத்தன் டாடா.
ரத்தன் டாடா-வின் மறைவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் வேளையில் உடன் பிறந்த சகோதரர் மீது பலரின் கவனம் திரும்பியுள்ளது. டாடா குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு துறைகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இந்த குடும்பத்தில் ஒருவர் மட்டும் எப்போதும் மீடியா வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி, தொழிற்துறையில் இருந்து ஒதுங்கி வாழ்ந்து வருகிறார் இருக்கிறார். அவர் தான் ஜிம்மி நாவல் டாடா.

ரத்தன் டாடாவின் இளைய சகோதரரான ஜிம்மி நாவல் டாடா, தனது சகோதரர் போல பொது வெளிச்சத்தில் வர விரும்புவதில்லை. டாடா குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர் தனது சொந்த வாழ்க்கையை மிகவும் எளிமையாக வாழ்கிறார்.
ரத்தன் டாடா தனது சகோதரர் ஜிம்மி நாவல் டாடாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர்கள் இருவரும் இளம் வயதிலிருந்தே ஒன்றாகவே வளர்ந்தனர். ரத்தன் டாடா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது சகோதரருடன் எடுத்த பழைய புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்வது வழக்கம். அப்படி கடந்த ஆண்டு ஜிம்மி நாவல் டாடா பிறந்த நாள் அன்று 1945ல் எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்தார்.
ஜிம்மி நாவல் டாடா டாடா குழுமத்தில் பங்குதாரராக இருந்தாலும், அவர் எந்த வகையான நிர்வாகப் பொறுப்பை ஏற்கவில்லை. அவர் தனது வாழ்க்கையை மிகவும் தனிமையாகவே கழிக்கிறார். ரத்தன் டாடா போலவே இவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் மும்பையின் கோலாபா பகுதியில் உள்ள ஒரு சிறிய அபார்ட்மெண்டில் மிகவும் எளிமையாக வாழ்ந்து வருகிறார். அவரிடம் ஒரு ஸ்மார்ட்போன் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரத்தன் டாடா போலவே ஜிம்மி நாவல் டாடாவும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார். அவர் திருமணம் செய்து கொண்டாரா, இல்லையா என்பது கூட தெரியவில்லை. அவர் தனது வாழ்க்கையைத் தனியாகவே கழிக்க விரும்புகிறார்.
டாடா குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் போலல்லாமல் ஜிம்மி நாவல் டாடா-வின் எளிமையான வாழ்க்கை பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவரது இந்த எளிமையான வாழ்க்கைதான் அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.


Click it and Unblock the Notifications