டாடா டிரஸ்ட்ஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நோயல் டாடா, கடந்த வாரம் டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரனுடன் தனது முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தினார். டாடா சாம்ராஜ்ஜியத்தின் இரு சக்திவாய்ந்த அமைப்புகளாக இருக்கும் டாடா சன்ஸ், டாடா டிரஸ்ட் அமைப்பின் தலைவர்கள் சந்தித்துள்ளது இக்குழுமத்தின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ரத்தன் டாடா மறைவிற்கு பின்பு டாடா சன்ஸ், டாடா டிரஸ்ட் அமைப்புகளுக்கு மத்தியிலான இணக்கம் ஏதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த சந்திப்பு நடந்துள்ளது. மேலும் டாடா சன்ஸ் நிர்வாக குழுவில் நோயல் டாடா இணைவது குறித்தும், டாடா டிர்ஸ்ட் சார்பில் 3வது உறுப்பினர் சேர்ப்பது குறித்தும் எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை.

இதேபோல் நோயல் டாடா அடுத்த சில நாட்களில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு டாடா குழுமத்திற்கும் அரசுக்கும் மத்தியிலான இணக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துடன் நடக்க உள்ளது.
டாடா சாம்ராஜ்ஜியத்தின் மொத்த ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸில் 66% பங்கை வைத்திருக்கும் டாடா டிரஸ்ட்ஸ், சமீபத்தில் ரத்தன் டாடாவுக்குப் பிறகு நோயல் டாடாவை தலைவராக நியமித்தது. ரத்தன் டாடாவின் சகோதரரான நோயல் டாடா, சர் டோரபஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் டிரஸ்ட்டியாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
ஒரே நேரத்தில் டாடா சன்ஸ் மற்றும் டாடா டிரஸ்ட்ஸ்-க்கும் தலைவராக இணைந்து இருந்த கடைசி நபர் ரத்தன் டாடா தான், தனது பதவிக்காலத்திலேயே டாடா குழுமத்தின் எதிர்காலத்தை வடிவமைக்க ஒரு நிர்வாகக் குழுவை (EC) அமைத்திருந்தார்.
இந்த நிர்வாக குழு மூலம் தனிநபர் முடிவைச் சார்ந்து இருக்காமல், ஒரு கூட்டமைப்பாக முடிவுகளை எடுக்க கட்டமைக்கப்பட்டது. இதன் மூலம் டாடா டிரஸ்ட்களையும், டாடா குழுமத்தையும் சரிவர நிர்வகிக்க முடியும் என்பது ரத்தன் டாடா திட்டம்.
ரத்தன் டாடா மறைவிற்குப் பின்பு நோயல் டாடா பதவி உயர்வு, 3வது உறுப்பினர் சேர்ப்பு ஆகியவற்றின் நிர்வாகத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிடாமல் இருக்க மென்மையான மாற்றம் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதி செய்யவே இந்த நோயல் டாடா, என் சந்திரசேகரன் மத்தியிலான சந்திப்பு நடந்துள்ளது.
நோயல் டாடா, மெஹ்லி மிஸ்திரி, வெனு ஸ்ரீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகிய நான்கு உறுப்பினர்களை உள்ளடக்கிய நிர்வாகக் குழுவை ரத்தன் டாடா அப்போது நிறுவியிருந்தார். இந்த குழு கூட்டாக டிரஸ்ட்களை நிர்வகிக்கும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications