இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபரும், பல கோடி முதலாளிகளின் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ரத்தன் டாடா-வின் பெயரிலும், அவர் அனுமதியில்லாமல் அவர் பெயரை பயன்படுத்தி பல போலி தகவல்கள், போலி செய்திகள் சமுக வலைத்தளத்தில் வலம் வருகிறது. அப்படியொரு செய்தி ரத்தன் டாடா அவர்களையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சமீபத்தில் பல்வேறு சமுக வலைத்தளத்தில் ரத்தன் டாடா கிரிப்டோகரன்சி துறையில் புதிதாக முதலீடு செய்துள்ளார். இதன் மூலம் பல கோடி பேர் லாபம் பெறும் வாய்ப்பு உருவாக்கியுள்ளது என தீயாக பரவி வந்த நிலையில், இதை ரத்தன் டாடா-வே பார்த்து அதிர்ச்சி அடைந்து விளக்கம் கொடுத்துள்ளார்.

ரத்தன் டாடா தனது டிவிட்டரில் இது மிகவும் முக்கியமான அறிவிப்பு, நான் ஏதேனும் கிரிப்டோகரன்சி சார்ந்த முதலீடுகள், பணிகளில் தொடர்புடையதாக ஏதேனும் விளம்பரம், செய்திகள் வந்தால் அது முற்றிலும் பொய்யானது. இதை மக்களை ஏமாற்றும் வேலை என்று விளக்கம் கொடுத்துள்ளார். இதற்காக ஒரு உதாரணத்தையும் கொடுத்தார் ரத்தன் டாடா.
மேலும் ரத்தன் டாடா, நெட்டிசன்கள் இதுக்குறித்து கட்டாயம் அறிந்துக்கொள்ள வேண்டும், நான் கிரிப்டோகரன்சி சார்ந்து எந்தொரு முதலீட்டையும், தொடர்பும் வைத்துக்கொள்ளவும் இல்லை எனவும் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சமுக வலைத்தளத்தில் பல்வேறு மோசடிகளில் அரங்கேறி வரும் வேளையில், மக்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பிரபலமானவர்களின் பெயரை பயன்படுத்தி விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
முதலில் கிரெடிட் கார்டு - டெபிட் கார்டு மோசடி, இதன் பின்பு உடனடி கடன், கிரிப்டோகரன்சி முதலீட்டில் அதிக லாபம் என மோசடி, அதன் பின்பு பேமெண்ட் மோசடிகள், அதன் தொடர்ந்து யூடியூப் - வாட்ஸ்அப் பெயரில் வேலைவாய்ப்பு என தற்போது பெரிய அளவில் மோசடி செய்யப்பட்டு வருகிறது. எனவே சமூக வலைத்தளத்தில் வருவதை அப்படியே நம்ப வேண்டாம்.
ரத்தன் டாடா தற்போது டாடா குழுமத்தின் நேரடி நிர்வாக பொறுப்பில் இல்லை, ஆனால் டாடா குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் டாடா டிராஸ்ட் அமைப்பின் தலைவராக இருக்கிறார். டாடா டிராஸ்ட் எந்த அளவுக்கும் டாடா குழுமத்தில் ஆதிக்கம் செய்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா சாம்ராஜ்ஜியத்தின் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் ஹோல்டிங் நிறுவனமாக இருப்பது டாடா சன்ஸ். இந்த டாடா சன்ஸ் நிறுவனத்தில் சுமார் 66 சதவீத பங்குகளை டாடா டிராஸ்ட் அமைப்பு மட்டுமே வைத்துள்ளது.
இது மட்டும் அல்லாமல் ரத்தன் டாடா தனிப்பட்ட முறையில் முதலீட்டு செய்து தனியாகவும் தனது முதலீட்டை நிர்வாகம் செய்து வருகிறார். ரத்தன் டாடாவின் தனி முதலீட்டு நிறுவனத்தின் பெயர் RNT Associates.


Click it and Unblock the Notifications