டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், டாடா குரூப்-ன் எமிரிட்டஸ் தலைவருமான ரத்தன் டாடா, திங்கட்கிழமை ஆரம்பத்தில் ரத்த அழுத்தம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததைத் தொடர்ந்து மும்பையில் உள்ள பிரீச் கண்டி (Breach Candy) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதை முற்றிலும் ரத்தன் டாடா மறுத்து தனது இன்ஸ்டாகிராம்-ல் பதிவிட்டு உள்ளார்.
ரத்தன் டாடா மருத்துவமனைக்கு வரும்போதே மோசமான உடல் நிலையில் கொண்டுவரப்பட்டதாக மனிகன்ட்ரோல் உட்பட பல செய்தி தளங்கள் அறிவித்தது. இதோடு ரத்தன் டாடா கார்டியாலஜிஸ்ட் டாக்டர் ஷரூக் அஸ்பி கோலவல்லா தலைமையிலான ஒரு சிறப்பு மருத்துவ குழுவின் மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாகவும். அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

இந்த செய்தி காட்டுத்தீ போல இந்தியா முழுவதும் பரவிய நிலையில், தற்போது சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ரத்தன் டாடா, என்னுடைய உடல் நலம் குறித்து வதந்திகள் பரவி வருவதை நான் அறிந்தேன், இது அனைத்தும் பொய்யானது. தற்போது நான் எப்போதும் போல் மெடிக்கல் செக் அப் செய்வதற்காக மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். கவலை அடைய ஒன்றுமில்லை, என்னுடைய உடல்நிலை நன்றாக உள்ளது. தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனவும் தனது பதிவில் கேட்டுக்கொண்டார்.

மருத்துவமனை தகவல்களின்படி, 86 வயதான தொழிலதிபர் சுமார் 12:30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார், அவர் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு, அவரது உடல்நிலையைத் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இது முற்றிலும் வதந்தி என ரத்தன் டாடா இன்ஸ்டாவிலும் டிவிட்டரலும் பதிவிட்டு உள்ளார்.
ரத்தன் நவல் டாடா 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராகவும், 2016 அக்டோபர் முதல் 2017 பிப்ரவரி வரை இடைக்கால தலைவராகவும் பணியாற்றினார். அவர் தொடர்ந்து அதன் தொண்டு நிதி நிறுவனங்களைத் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். 86 வயதிலும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்வதில் தீவிரமாக உள்ளார்.
அவர் 2008 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் மற்றும் 2000 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் ஆகியவற்றை பெற்றவர்..
இந்தியாவில் இருக்கும் பெரிய நிறுவன தலைவர்களில் ஸ்டார்ட்அப் துறையில் அதிகம் முதலீடு செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் ரத்தன் டாடா. இன்று வரை 30-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார், பெரும்பாலான முதலீட்டை தனிப்பட்ட முறையில் மற்றும் சில அவரது முதலீட்டு நிறுவனம் மூலம் செய்யப்பட்டவை. இவருடைய முதலீட்டுக்கும் டாடா குழுமத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications