இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் டாடா-வின் முன்னாள் தலைவரும், டாடா டிரஸ்ட் நிறுவத்தின் தலைவருமான ரத்தன் டாடா, இந்தியாவில் பல்வேறு ஸ்டார்ட்அப் மற்றும் டெக்னாலஜி நிறுவனங்களில் முதலீடு செய்து வரும் நிலையில் தற்போது புதிதாக ஒரு மீடியா நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார்.
இந்தியாவில் 1993ஆம் ஆண்டு துவங்கப்பட்ட Pritish Nandy Communications (PNC) டிவி கன்டென்ட் பொட்டிக் மற்றும் பல்வேறு செய்தி மற்றும் எண்டர்டெயின்ட் ஷோக்களைச் செய்து வருகிறது.

இந்நிறுவனத்தில் ரத்தன் டாடா குறிப்பிடத்தக்க அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளதாக Pritish Nandy Communications (PNC) நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் 9.98 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் வெறும் 21.25 ரூபாய்க்கு வர்த்தகம் செய்ய Pritish Nandy Communications (PNC) நிறுவனப் பங்குகள் இரண்டு நாள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்தது மூலம் இன்றைய வர்த்தக முடிவில் இந்நிறுவனப் பங்குகள் 25.90 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்துள்ளது.
சுமார் 18 வருடம் இந்திய மீடியா துறையில் இயங்கி வரும் Pritish Nandy Communications நிறுவனம் இன்றைளவில் 2,653 மில்லியன் ரூபாய் தொகைக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications