சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்படும் தொழிலதிபர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா. ரத்தன் டாடா இன்று தனது 86வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் இவருடைய காதல் கதை மீண்டும் டிரெண்டாகியுள்ளது.
ரத்தன் டாடா சில வருடங்களுக்கு முன்பு ஒரு மீடியா நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தனது பர்சனல் வாழ்வில் நடந்த முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். இதில் முக்கியமாக ரத்தன் டாடாவுக்கும் அவரது தந்தைக்கும் மத்தியிலான கருத்து வேறுபாடு குறித்துப் பேசினார்.

இந்தப் பேட்டியில் ரத்தன் டாடா-வின் முதலும் கடைசியுமான காதல் கதையும், ஆசை காதலியை திருமணம் செய்யும் நிலைக்குச் சென்று தோல்வி அடைந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். தந்தை மற்றும் மகன் தொடர்ந்து முரண்பட்டு இருந்த வேளையில் ரத்தன் டாடா தனது விருப்பப்படி முட்டி மோதி அமெரிக்காவின் கார்னல் பல்கலைக் கழகத்துக்குப் படிக்கச் சென்றார்.
முதலில் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்து விட்டு, லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் ரத்தன் டாடா இருந்தபோது தன் மனதுக்குப் பிடித்த பெண்ணைக் கண்டதாகவும், அந்தப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்ததாகவும் இந்தப் பேட்டியில் தெரிவித்தார்.
ஆனால் அந்த நேரத்தில் தன்னுடைய பாட்டிக்கு உடல்நிலை மோசமான காரணத்தால் இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு உருவானது, இந்தப் பயணத்தின் போது இவருடைய காதலியும் இந்தியாவுக்குத் தன்னுடன் வருவார் என எண்ணினார். ஆனால் 1962ஆம் ஆண்டு இந்தியாவுக்குச் சீனாவுடன் போர் மூண்டதால் அவருடைய காதலியின் பெற்றோர் இந்தியா வர அனுமதிக்கவில்லை. இதனால் ரத்தன் டாடா-வின் காதல் முறிந்தது.
இதன் பின்பு தனது காதலியை சந்திக்கவே இல்லை என்றும், அதன் பின்பு வேறு ஒருவர் மீது காதல்வயப்பட விருப்பம் இல்லாத ரத்தன் டாடா பிஸ்னஸ் மீது காதல் கொண்டார்.
இதைப் புரிந்துகொண்ட ரத்தன் டாடா குடும்பம் அவருக்கு 4 முறை திருமணம் செய்துகொள்ளும் முடிவை எட்டிய போதும் பல்வேறு காரணத்தால் திருமணம் செய்ய மறுத்தார் ரத்தன் டாடா. கிட்டத்தட்ட மதராசபட்டினம் கதையைப்போலவே உள்ளது, ஆனால் ரத்தன் டாடாவும் அமெரிக்கா சென்று அவருடைய காதலியை சந்திக்க முயற்சி செய்யவில்லை, அவருடைய காதலியும் இந்தியா வந்து ரத்தன் டாடா என்ற மாபெரும் வியாபார சக்கரவர்த்தியைக் காணவில்லை.


Click it and Unblock the Notifications