ரத்தன் டாடா இன்று தனது 86வது பிறந்த நாளை கொண்டாடுகிறார், டிசம்பர் 28, 1937ம் ஆண்டு பிறந்த இவர் வாழ்க்கையில் குறுகிய காலம் அமெரிக்காவில் வாழ்ந்தது மட்டும் அல்லாமல் அவருடைய வாழ்க்கையை புரட்டிப்போட்ட பல சம்பவங்கள் இங்கு நடந்தது என்றால் மிகையில்லை.
ரத்தன் டாடா மட்டும் தனது முடிவை மாற்றி இருந்தால் இந்த நேரம் இந்தியாவில் ஒரு கூகுள், மைக்ரோசாப்ட் உருவாகியிருக்கும். டெக் உலகில் சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லா ஆகியோரை கொண்டாடுவது போல் ரத்தன் டாடா-வையும் கொண்டாடி இருப்பார்கள். என்ன நடந்தது.

ரத்தன் டாடா-வின் பெற்றோர் விவகாரத்து மற்றும் இளமை காலத்தில் பல இடங்களுக்கு மாறியதால் பள்ளிக் கல்வியை மட்டும் 4 பள்ளிகளில் படித்தார். மும்பையில் கேம்பியன் பள்ளி, கதீட்ரல் அண்ட் ஜான் கானான் பள்ளி, சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளி, அமெரிக்காவில் ரிவர்டேல் கண்ட்ரி பள்ளி ஆகியவற்றில் படித்தார்.
பெரும் வர்த்தகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த காரணத்தால் சிறு வயதில் இருந்து பிஸ்னஸில் மிகவும் ஆர்வமாக இருந்தார், இந்தக் காரணத்தால் பள்ளிப்படிப்பை முடித்த கையோடு 1959 இல் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் பட்டம் பெற்றார். அதன் பின்னர் 1975 இல், அவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் மேலாண்மை பிரிவில் பட்டம் பெற்றார்.
அமெரிக்கக் கல்லூரியில் பட்டம் பெற்ற ரத்தன் டாடா-விற்கு அன்றைய காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான IBM-ல் வேலை கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனம் என்றால் அது ஐபிஎம் தான.
இப்படியிருக்கும் சூழ்நிலையில், ஐபிஎம் வேலை வேண்டாம் என உதறித் தள்ளிவிட்டு இந்தியாவிற்கு பறந்தார். இந்தியா வந்த ரத்தன் டாடா டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஆப்ரேஷன் மேனேஜர் ஆகப் பணியில் சேர்ந்து படிப்படியாக உயர்ந்தார்.
ஆனால் ரத்தன் டாடா, ஐபிஎம் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தால் இந்தியாவில் ஒரு கூகுள், மைக்ரோசாப்ட் உருவாகியிருக்க வாய்ப்பு உள்ளது. இதேபோல் இன்று டெக் உலகையே மாற்றியுள்ளதாகச் சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லா ஆகியோர் பாராட்டப்படுவது போல் ரத்தன் டாடா-வையும் கொண்டாடி இருப்பார்கள்.
ரத்தன் டாடா தனது டெக் மீதான தாகத்தை டிசிஎஸ் மூலம் நிறைவேற்றிக்கொண்டாலும், பிற துறையில் ரத்தன் டாடா செய்த பணிகள் டாடா குழுமத்தை தாண்டி இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியது மறுக்க முடியாது.
டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஆப்ரேஷன் மேனேஜராக பணியில் சேர்ந்த 1961 முதல் டாடா குழுமத்தின் பல்வேறு நிறுவனத்தில் முக்கியப் பணிகளையும், பதவிகளையும் வகித்து 1991 இல் டாடா குழுமத்தின் தலைவராக உயர்ந்தார் ரத்தன் டாடா.


Click it and Unblock the Notifications