பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பை தெரிந்துக்கொள்ள போர்ப்ஸ், ஹூரன் போன்ற பல தளங்கள் இருப்பது போல், ஒருவரின் புகழை தெரிந்துக்கொள்ள டிவிட்டர் போன்ற சமுக வலைத்தளங்கள் முக்கிய அளவுகோல் ஆக உள்ளது. இப்படியிருக்கையில் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2023 அறிக்கையில் புகழ்பெற்ற தொழிலதிபர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
சொத்து மதிப்பிலும், ஆடம்பர வாழ்க்கையில் பலரும் முந்தினாலும் மக்களின் மனதை வென்றவர்களில் ரத்தன் டாடா எப்போதும் டாப்பு தான், எக்ஸ் தளத்தில் சுமார் 12.6 மில்லியன் பாலோவர்களை வைத்துக்கொண்டு இருக்கும் ரத்தன் டாடா Most Followed Entrepreneur In India பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

ரத்தன் டாடா-வை தொடர்ந்து மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திராவை 10.8 மில்லியன் பாலோர்கள் உடன் 2வது இடத்தில் உள்ளார். கடந்த ஒரு வருடத்தில் அதிகமான பாலோவர்களை பெற்றார் ஆனந்த் மஹிந்திரா. ரத்தன் டாடா-வின் பாலோவர்கள் எண்ணிக்கை 8 லட்சம் அதிகரித்த நிலையில், ஆனந்த மஹிந்திராவின் பாலோவர்கள் எண்ணிக்கை கடந்த ஒரு வருடத்தில் 11 லட்சம் அதிகரித்தது.
ரத்தன் டாடா மற்றும் ஆனந்த் மஹிந்திராவைத் தாண்டி அதிகம் பாலோவர்களை வைத்துள்ள டாப் பத்து தொழில்முனைவோர்களில் பதஞ்சலியின் ஆச்சார்யா பால்கிருஷ்ணா (66 லட்சம்), கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை (53 லட்சம்), மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா (30 லட்சம்), இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி (25 லட்சம்), ஸ்டார்ட்அப் முதலீட்டாளரான ரோனி ஸ்க்ரூவாலா ( 20 லட்சம்), ஹர்ஷ் வர்தன் கோயங்கா (18 லட்சம்), கிரண் மஜும்தார்-ஷா (16 லட்சம்), உதய் கோடக் (11 லட்சம்).
இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்புடன், இந்த பணக்காரர்கள் குறித்து பல்வேறு ஆய்வுகள் அடங்கிய 12வது வருடாந்திர அறிக்கையை ஹுருன் அக்டோபர் 10 ஆம் தேதி இரவு வெளியிட்டது. இந்த பட்டியலில், அதானி குழுமத்தின் வினோத் அதானி & குடும்பம் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் உதய் கோடக் ஆகியோருக்குப் பதிலாக குமார் மங்கலம் பிர்லா மற்றும் நிரஜ் பஜாஜ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications