இந்தியாவின் முன்னணி பங்குச்சந்தை தரகு நிறுவனமான ஜெரோதா நிறுவனர் நிகில் காமத் மற்றும் டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா ஆகியோரின் முதலீட்டில் இங்கும் நகை கடையாக புளூஸ்டோன் ஜூவல்லரி இந்த ஆண்டு ஐபிஓ மூலம் சுமார் ரூ.2,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டார்ட்அப் புளூஸ்டோன் ஜூவல்லரி, முதலீட்டு வங்கியாளர்களிடம் இருந்து IPO வெளியிடுவதற்கான முன்மொழிவை எதிர்பார்த்து இருக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 10-15% பங்குகளைப் பொதுச் சந்தையில் புதிய பங்கு வழங்கல் மற்றும் OFS வாயிலாக விற்பனை செய்து சுமார் ரூ.2,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

புளூஸ்டோன் ஜூவல்லரி ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் ரத்தன் டாடா (தனிப்பட்ட முதலீடு), ஆக்செல், கலாரி, ஐயன் பில்லர், ஐவிகேப், நிகில் காமத் மற்றும் சாமா கேபிடல் உள்ளிட்ட பிரபலமான பல முதலீட்டாளர்கள் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட புளூஸ்டோன் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
புளூஸ்டோன் ஜூவல்லரி நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கும் தனியார் பங்கு முதலீட்டாளர்களில் ஒரு பகுதியினர் இந்த IPO மூலம் தங்களின் பங்குகள் அனைத்தையும் அல்லது ஒரு பாதியை விற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரத்தன் டாடா கிட்டத்தட்ட 10 வருடத்திற்கு முன்பு (செப்டம்பர் 2014 இல்) புளூஸ்டோனில் முதலீடு செய்தார். அதேசமயம், கடந்த ஆண்டு, Zerodha இணை நிறுவனர் நிகில் காமத், புளூஸ்டோனில் 100 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகத் தகவல் வெளியானது.
செங்கோ கோல்ட், கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் டைட்டனின் தனிஷ்க் பிராண்ட் போன்ற பெரிய நகைக்கடை விற்பனையாளர் பங்குச்சந்தையில் அதிகப்படியான வரவேற்பு கிடைத்திருக்கும் வேளையில், BlueStone இந்த வாய்ப்பை பயன்படுத்து IPO மூலம் பங்குச்சந்தையில் இறங்குவது மட்டும் அல்லாமல் அதன் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வகையில் முதலீட்டை திரட்ட உள்ளது.
இதில் செங்கோ கோல்ட் சமீபத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். தற்போது 5,908 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்படுவது மட்டும் அல்லாமல், இது கடந்த ஆண்டு ஜூலையில் ஐபிஓ-வில் வெளியான மதிப்பீட்டை காட்டிலும் 141% அதிகமாகும்.
இந்த நேரத்தில், புளூஸ்டோன் தனது நகைகளை 180 க்கும் மேற்பட்ட இடங்களில் விற்பனை செய்கிறது மற்றும் 8,000 க்கும் மேற்பட்ட அசல் வடிவமைப்புகளுடன் பரந்த விற்பனை பட்டியலைக் கொண்டுள்ளது. புளூஸ்டோன் நிறுவனம் ஜெய்ப்பூர், மும்பை மற்றும் பிற இடங்களில் நகைகளை உற்பத்தி செய்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications