எதற்காக இவ்வளவு வெறுப்பு.. சமூக வலைதளங்களில் வெறுப்பினை பகிர வேண்டாம்.. ரத்தன் டாடா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய மக்களை கொரோனா வைரஸ் என்னும் பெருந்தொற்று நோயிலிருந்து காப்பாற்ற, 1,500 கோடி ரூபாயினை வாரி வழங்கிய வள்ளல் தான் தொழிலதிபர் ரத்தன் டாடா.

Ratan Tata called for stop online hatred and bullying

நாட்டு மக்களை கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று நோயிலிருந்து காப்பாற்றவே இதனை அளித்ததாகவும் டாடா குழுமம் அப்போது தெரிவித்தது.

ஆக இத்தனை மனித நேயம் மிக்க மனிதரான ரத்தன் டாடா சமூக வலைதளங்களில் மக்கள் யாரும் வெறுப்புணர்வை பகிர வேண்டாம். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

ரத்தன் டாடா எதிர்பார்ப்பு
 

ரத்தன் டாடா எதிர்பார்ப்பு

இது குறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த ஆண்டு அனைவருக்கும் சவாலான வருடமே. ஆக நாம் ஒருவருக்கொருவர் உதவியாகவும், மிக ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். ஆனால் இது மற்றவர்களை காயப்படுத்தும் நேரம் இதுவல்ல என்வும் குறிப்பிட்டுள்ளார்.

இது கட்டாயம் தேவை

இது கட்டாயம் தேவை

மேலும் அனைவருக்கும் இடையே நல்ல புரிதலும், அதிக அன்பும், அதிக பொறுமையும் தற்போது தேவைப்படுகிறது. அரவனைப்பும் ஊக்கமும் உள்ள தளமாக சமூக வலைதளங்கள் மாறும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சமூகம்

ஆன்லைன் சமூகம்

மற்றவர்களை தாழ்த்திப் பேசுதல், வெறுப்பை விதைக்கும் வகையில் பேசுதல், இதை ஆன்லைன் சமூகம் நிச்சயமாக கைவிட வேண்டும் என்று தொழிலதிபர் ரத்தன் டாடா கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பல வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

சவால்கள் நிறைந்துள்ளது
 

சவால்கள் நிறைந்துள்ளது

இதன் காரணமாக ஏரளமான மக்கள் தங்களது வேலையினை இழந்துள்ளனர். கொரோனா தொற்றினை தவிர சில வாரங்களுக்கு முன்பு கடும் வெள்ளத்தாலும், வெட்டுக்கிளி தாக்குதல்களையும் சமாளிக்க வேண்டியுள்ளது. இதற்கிடையில் கடந்த வாரம் சீனாவுடன் வன்முறை மோதலில் 20 ராணுவ வீரர்கள் பலியானர்கள். ஆக இதற்கு மத்தியில் தான் இந்த ஆண்டுக்கு அனைவருக்கும் சவால்கள் நிறைந்துள்ளது.

உத்வேகம் அளிக்கிறது

உத்வேகம் அளிக்கிறது

இதன் காரணமாக ஆன்லைன் சமூகத்தில் ஒருவருக்கொருவர் புண்படுத்துவதையும், ஒருவரையொருவர் வீழ்த்துவதையும் நான் காண்கிறேன் என்றும் ரத்தன் டாடா தனது இன்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார்.

மேலும் அவரின் இந்த பதிவுக்கு லைக்குகளும் கமாண்டுகளும் அதிகரித்து வருகின்றனர். பலர் அவருக்கு நன்றி கூறியுள்ளதோடு, பலர் உங்களின் பதிவு உத்வேகம் அளிப்பதாகவும் எழுதியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ratan Tata on Sunday called for stop online hatred and bullying

Ratan Tata said this year full of challenging for everyone, i see the online community being hurtful to each other.
Story first published: Monday, June 22, 2020, 14:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X