உங்கள் மீது யாரேனும் கற்களை வீசினால், அதனை கொண்டு கட்டிடம் எழுப்புங்கள் என்று கூறியவர் ரத்தன் டாடா. இந்தியாவில் தொடங்கிய இந்த வணிகம், உலகம் முழுக்க மாபெரும் வளர்ச்சி கண்டு விரிவடைந்துள்ளது.
நாம் உணவில் போடும் உப்பு தொடங்கி விமான சேவை, தங்கம் வரையில் பல்வேறு வணிகத்திலும் டாடா குழுமம் வெற்றி கோலேச்சி வருகின்றது.
இப்படி உலகம் முழுக்க வணிகத்தினை செய்து வரும் டாடாவுக்கு, இந்தியாவின் மிகப்பெரிய மாமனிதரான ரத்தன் டாடாவுக்கு இன்று 85வது பிறந்த நாள் ஆகும்,
ஃபெராரி கலிஃபோர்னியா
ரத்தன் டாடா ஆடம்பரமான சிவப்பு நிற ஃபெராரி கலிஃபோர்னியா ரோட்ஸ்டரை வைத்திருக்கிறார். இதன் மதிப்பு சுமார் 3.45 கோடி ரூபாய் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத்தன் டாடாவுக்கு பிடித்தமான கார்களில் இதுவும் ஒன்று. இந்த காரில் டாடா அடிக்கடி பயணம் செய்துள்ளதை, இந்த கார் அடிக்கடி வெளியே சுற்றி வருவதை பார்க்கலாம்.
டசால்ட் ஃபால்கோன் பிரைவேட் ஜெட்
ரத்தன் டாடா டசால்ட் ஃபால்கோன் பிரைவேட் ஜெட் 2000-ன் உரிமையாளர் ஆவார். மற்ற பில்லியனர்களை போல் அல்லாமல், ரத்தன் டாடாவே இதனை இயக்கும் திறனையும் கொண்டவர். இது 2 என்ஜினை கொண்ட இந்த ஜெட்டினை, திறன் வாய்ந்த பிரெஞ்ச் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டது.இந்த ஜெட்டின் மதிப்பு சுமார் 30 மில்லியன் டாலர்கள் என கூறப்படுகிறது.
மும்பை கடற்கரை பங்களா
மாடியில் பிரம்மாண்ட நீச்சல் குளம், எழு அடுக்குகள், 15,000 சதுர அடி என, அரபிக் கடலின் எல்லையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஒரு சொகுசு பங்களாவாகும். இது ரத்தன் டாடா விரும்பி ஓய்வெடுக்கும் ஒரு பங்களாவாகும். இது டாடா சன்ஸ் குழுமத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பிறகு, டாடாவுக்கு ஓய்வு இல்லமாக கட்டப்பட்டது. இந்த ஆடம்பர பங்களாவில் உணவு, வாழ்க்கை மற்றும் தனியார் படுக்கையறைகள் உள்ளன. இதன் மதிப்பு சுமார் 150 கோடி ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.
மசெராட்டி குவாட்ரோ போர்டு -
மசெராட்டி குவாட்ரோ போர்டு சிறந்த ஜெக்னா சில்க் போன்ற உயர்தர பொருட்களால் உருவாக்கப்பட்டது. இந்த சொகுசு கார் ஃபெராரியை விட சிறந்த ஒரு காராக கருதப்படுகிறது. இதன் விலை சுமார் 2 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
லேண்ட் ரோவர் பிரீலாண்டர்
ரத்தன் டாடா லேண்ட் ரோவர் நிறுவனத்தை வாங்கும் முன்பு லேண்ட் ரோவர் பிரீலாண்டர் காரை டாடா வாங்கி விட்டார். ரத்தன் டாடாவின் 4 சிலிண்டர் டீசல் எஞ்சின் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டட் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இது அதிகபட்சமாக 420lb அடி, 187 பி ஹெச் பி ஆற்றலை உருவாக்குகிறது.
சிறந்த உதாரணம்
ரத்தன் டாடா சுமார் 21 ஆண்டுகளாக டாடா குழுமத்திற்கு தலைமை தாங்கியவர், அவரின் பணிகாலத்தின் நிறுவனத்தின் வருவாயும், லாபமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 85 வயதான இளைஞரான டாடா இன்றும் இளைய தலைமுறையினருக்கு சிறந்த முன்னுதாரணமாக உள்ளார். அப்படிப்பட்ட இளைஞருக்கு நாமும் நம் வாழ்த்துகளை கூறுவோமே..
ஹேப்பி பர்த்டே ரத்தன் டாடா சார்..!
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications